For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  “ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”... மிரட்டும் 'வடசென்னை' டீசர் !

  |

  சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் படு மிரட்டரலாக வெளி வந்திருக்கிறது.

  பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மற்றொரு படம் வடசென்னை. பெயரை வைத்தே இது ஒரு கேங்ஸ்டர் படம் என புரிந்து கொள்ள முடியும். ஆனால் வடசென்னையை மையப்படுத்தி ஏற்கனவே வெளிவந்த பல படங்களின் மத்தியில், இதில் என்ன புதிதாக இருக்க போகிறது என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.

  இந்த கேள்விக்கான பதிலாய் தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டிருக்கிறது வடசென்னை படத்தின் முதல் டீசர். இது வழக்கமான படம் அல்ல என்பதை மீண்டும் உரக்க சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

  அன்புவாக தனுஷ்:

  அன்புவாக தனுஷ்:

  கேரம்போர்டு விளையாட்டில் உலக சாம்பியனாக வேண்டும் என்பது அன்பு எனும் இளைஞனின் கனவு. அவனது ஏரியாவில் வாழும் முக்கிய புள்ளியின் மரணம் அன்புவின் கனவை சிதைக்கிறது. இந்த ஒன்லைனை வைத்து, வடசென்னை மக்களின் வாழ்வை ரத்தமும், சதையுமா சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒரு மனிதனின் 35 வருட வாழ்க்கையை பேசும் இப்படம் மூன்று பாகங்களாக வெளிவர இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்டது முதல் பாகத்தின் டீசர் தான்.

  மாஸ் ஓபனிங்:

  மாஸ் ஓபனிங்:

  ஒரு நிமிடம் நான்கு விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில், படத்தின் கதையை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் காட்சியில் சிறு பையனாக கேரம் விளையாடுகிறார் தனுஷ். கேரம்போர்ட்டை பிரம்மிப்பும் தனுஷ் பார்க்கும் அந்த பார்வையே மாஸ் ஓபனிங். இவர் தான் நாயகன் என்பதை வெளிப்படுத்தும் அந்த காட்சிக்கு அடுத்து வருவது சமுத்திரக்கனியின் என்ட்ரி. ஒரு அறையில் இருந்து தனது சகாக்களுடன் ஸ்லோ மோஷனில் மிரட்டலாக வெளிவருகிறார். சமுத்திரக்கனிக்கு அடுத்தது கிஷோர். சரிசெய்யப்படாத தாடியுடன் கிஷோரின் சிரிப்பு பல அர்த்தங்களை கடத்துகிறது.

  அமீர் ஜோடியாக ஆண்ட்ரியா:

  அமீர் ஜோடியாக ஆண்ட்ரியா:

  அடுத்ததாக 10 படகுகள் சூழ டாப் ஷாட்டில் அமீர் வரும் காட்சி. ஆண்ட்ரியாவும் அமீரும் கைக்கோர்த்தபடி தெருவில் நடந்து வர வலது பக்கம் கிஷோரும், இடது பக்கம் டேனியல் பாலாஜியும் பந்தோஸ்தாக துணைக்கு வருகிறார்கள். அமீருக்கு பின்பக்கம் சிரித்தபடியே நடந்து வருகிறார் சமுத்திரக்கனி. இதன் மூலம் அமீர் தான் படத்தின் முக்கிய புள்ளி என்பதும். கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோர் அவரின் சகாக்கள் என்பதும் தெளிவாகிறது. எதையோ முடித்துவிட்டு தனது சகாவுடன் பைக்கில் வருகிறார் டேனியல் பாலாஜி.

  சமுத்திரக்கனி:

  சமுத்திரக்கனி:

  அடுத்தக் காட்சியில் ஒரு கார் வெடித்து சிதறுகிறது. கோபமும், அழுகையுமா ஆண்ட்ரியா வெறித்தக் கண்களுடன், நெற்றில் பொட்டோடு பலர் சூழ நடுவில் அமர்ந்திருக்கிறார். அமீரின் மரணத்தை வெளிப்படுத்துகிறது இந்த காட்சி. தனுஷின் குரலில் அப்போது வருகிறது முதல் டயலாக், "ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது". கையில் கத்தியுடன் இருட்டில் தனுஷ் நடந்து வர, காரில் இருந்து எதிரே வருபவரை குனிந்து பார்க்கிறார் சமுத்திரக்கனி. ஆக சமுத்திரக்கனி தான் படத்தின் வில்லனாக இருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறது.

  லிப் லாக் காட்சி:

  லிப் லாக் காட்சி:

  அடுத்தடுத்த காட்சிகளில் போலீஸ்காரர், ராதாரவி (உள்ளூர் அரசியல் பிரமுகர் என நினைக்கிறேன்) என மற்ற கேரக்டர்களை அறிமுகப்பத்துகிறது டீசர். போதை பொருள், ரவுடியிசம், அரசியல் என படத்தின் களம் கண்முன் விரிகிறது. இதை எல்லாம் முடித்துவிட்டது, இப்போது வருகிறது காதல் எசிசோட். ஐஸ்வர்யா ராஜேஷ் - தனுஷ் ஜோடியின் காதல் காட்சிகள் ஒரு லிப் லாக் முத்தத்துடன் சுவாரஸ்படுத்துகிறது.

  மிரட்டல்:

  மிரட்டல்:

  எதிரிகளை வெட்டி சாய்க்கும் தனுஷ், போலீஸ் தடியடி என இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர். டீசரின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசையும், ஜி.பி.வெங்கடேஷ் - ஆர்.ராமரின் படத்தொகுப்பும் தான். கண்ணிமைக்கவிடாமல் மிரட்டியிருக்கிறார்கள்.

  வெற்றிமாறனின் வசனங்கள்:

  வெற்றிமாறனின் வசனங்கள்:

  "ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது, ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யனும், திருப்பி அடிக்கலனா அவனுங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுனே இருப்பானுங்க, குடிசையோ குப்பமேடோ இது நம்ம ஊருக்கா... நம்மதான் அது பாத்துக்கனும்... நம்மதான் அதுக்காக சண்டை செய்யனும்" இவை எல்லாமே டீசரில் தனுஷ் பேசும் வசனங்கள். வெற்றிமாறனின் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.

  தனுஷுக்கு பரிசு:

  ஏற்கனவே படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை டபுள் மடங்காக்கி இருக்கிறது வடசென்னை டீசர். தனுஷூக்கு வேறும் யாரும் இவ்வளவு சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்திருக்க முடியாது. உங்களின் பரிசுக்காக நாங்களும் காத்திருக்கிறோம் வெற்றி... சீக்கிரம் வந்து பரிசு கொடுங்க.

  English summary
  Actor Dhanush starring, Vetrimaran directorial 'Vadachennai' movie teaser is now trending in youtube.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more