»   »  நட்சத்திர கிரிக்கெட்... வாய் வலிக்க வலிக்க பேசிய வடிவேலு வராதது ஏன்?

நட்சத்திர கிரிக்கெட்... வாய் வலிக்க வலிக்க பேசிய வடிவேலு வராதது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட தேவையான நிதியை திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Vadivelu Abstained Star Cricket Match

சுதீப், பாலகிருஷ்ணா, மம்முட்டி, நிவின் பாலி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், நாகார்ஜூனா என அண்டை மாநில நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அதே நேரம் அஜீத், விஜய். சிம்பு, சரத்குமார், வடிவேலு போன்ற தமிழ்த் திரையுலக நடிகர்கள் இப்போட்டியில் பங்கு பெறவில்லை.

குறிப்பாக நடிகர் சங்கத் தேர்தல் முதல் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி முன்னோட்டம் வரை அனைத்திலும் கலந்து கொண்ட வடிவேலு, நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

வடிவேலு கலந்து கொள்ளாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மை அது இல்லையாம்.

வடிவேலு நட்சத்திரப் போட்டியில் கலந்து கொள்வதாகத் தான் இருந்தது. ஆனால் அவருடைய அம்மாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி கருத்து வேறுபாட்டினால் வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்பதில் உண்மையில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Star Cricket: Ajith, Vijay, Simbu, Vadivelu Abstained in this Event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil