»   »  வடிவேலு முடிவு.. அப்படியே ஷாக் ஆகி போன முன்னணி காமெடியன்கள்!

வடிவேலு முடிவு.. அப்படியே ஷாக் ஆகி போன முன்னணி காமெடியன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வடிவேலு இனி காமெடியனாக மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார்.

காமெடி புயலாக வலம் வந்து கொண்டிருந்த வைகை புயல் சில வருடங்களுக்கு முன்னர் நடித்தால் ஹீரோவாகத்தான் என்று முடிவெடுத்திருந்தார். அதன் படியே அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.

தற்போது, கத்திச்சண்டை படத்தின் மூலம் மீண்டும் காமெடியில் குதித்துள்ள வடிவேலு, பி வாசு இயக்கத்தில் உருவாகிவரும் சிவலிங்கா படத்திலும் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.

Vadivelu decides to stick to comedy only

வடிவேலு தமிழ் திரையுலகை விட்டு விலகியிருந்த காலத்தில் பல காமெடியன்கள் தமிழில் அறிமுகமாகி, வளர தொடங்கிவிட்டனர். இருப்பினும், அவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்ததே தவிர, இன்று வரை வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

தற்பொழுது மீண்டும் காமெடியில் குதித்துள்ள வடிவேலுவுக்கு, வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றதாம். அதனால், தன்னுடைய ஹீரோவாக நடிக்கும் முடிவை விடுத்து, காமெடியனாகவே இனிவரும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த முடிவால் வளர்ந்து வரும் காமெடியன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Comedian Vadivelu has decided to stick to his role as comedian from now on.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil