For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. கடுப்பேத்துறாங்க மை லார்டு: இன்னும் ஏகப்பட்டது இருக்கு!#HBDVadivelu

  |

  சென்னை: வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது காமெடியில் கலக்கிய டாப் படங்கள் குறித்து ஓர் பார்வை..

  நடிகர் வடிவேலு 1988ஆம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் அன் கிரெடிட்டட் ரோலில் நடித்தார் வடிவேலு.

  அதன் பிறகு என் ராசாவின் மனசிலே தொடங்கி இன்று வரை டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வடிவேலு.

  கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்ட விவகாரம்.. மருத்துவ இலக்கியங்கள் ஆதாரம்.. நடிகை மீண்டும் விளக்கம்!

  காமெடி உலகின் அரசன்

  காமெடி உலகின் அரசன்

  மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே டேமேஜ் செய்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இதனாலேயே தான் என்னதான் இம்சை பண்ணிலாம், இன்று தமிழ் சினிமாவின் காமெடி உலகில் இன்றும் அரசனாக வலம் வருகிறார்.

  வாழ்த்து

  வாழ்த்து

  இந்நிலையில் நடிகர் வடிவேலு இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். #HappyBirthdayVadivelu என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்டிங்கில் உள்ளது.

  டாப் டயலாக்குகள்

  டாப் டயலாக்குகள்

  இந்நிலையில் நடிகர் வடிவேலு நடித்த டாப் நகைச்சுவை படங்கள் குறித்த பட்டியலை பார்ப்போம். வடிவேலுவின் காமெடி கதாப்பாத்திரங்களில் நேசமணி, படித்துரை பாண்டி, நாய் சேகர், ஸ்னேக் பாபு, கிரிகாலன், வக்கில் வண்டு முருகன் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் எவர் க்ரின். அவை அனைத்துமே என்றென்றும் ரசிக்கக்கூடியவை.

   பேச்சு பேச்சாதான் இருக்கணும்

  பேச்சு பேச்சாதான் இருக்கணும்

  அந்த வகையில் வின்னர் படத்தில் பிரசாந்த் மற்றும் கிரண் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்த இந்தப் படத்தின் ஹீரோ உண்மையில் வடிவேலு தான். சங்கம் என்ற வார்த்தையும் வருத்தப்படாத இளைஞர் சங்கம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக வடிவேலுதான் காரணம். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பேச்சு பேச்சாதான் இருக்கனும் என்ற டயலாக்கும் இன்றும் இளைஞர்களால் பயன்டுத்தப்பட்டு வருவது வடிவேலுவுக்கு கிடைத்த வெற்றிதான்.

  கடுப்பேத்துறாங்க மை லார்டு

  கடுப்பேத்துறாங்க மை லார்டு

  அடுத்து எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீல் வண்டு முருகன் படத்தில் அவர் பயன்படுத்தியிருக்கும் தேங்க்யூ மை லார்டு தேங்க்யூ என்ற டயலாக் அந்த படம் வெளி வந்த நேரத்தில் பலரின் உதடுகளிலும் உச்சரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் வக்கீலாக நடித்த வடிவேலு கடுப்பேத்துறாங்க மைலார்டு என பேசும் டயலாக் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ்.

  ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிசர்

  ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிசர்

  அடுத்து அஜித்தின் மருதமலை படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரமாக நடித்திருப்பார் வடிவேலு. அந்தப் படத்தில் ஸ்ட்ரிக்ட் போலீஸ் அதிகாரியாக, காமெடியில் கலக்கியிருப்பார். ஏட்டு ஏகாம்பரம் என்ற கேரக்டர் பெயர் இன்றும் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  அடிச்சான் பாரு

  அடிச்சான் பாரு

  அதேபோல் சரத்குமாருடன் அரசு படத்தில் பிச்சுமணி என்ற கதாப்பாத்திரத்தில் பிச்சு உதறியிருப்பார் வடிவேலு. கோவிலில் மணி அடிக்கும் பெல் பாய் கேரக்டரில் இருந்து அரசு வேலைக்கு செல்லும் வடிவேல், அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர என்று கூறும் டயலாக் இன்றும் இளசுகளால் டைமிங்கில் பயன்படுத்தப்பட்டுகிறது.

  Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram
  எதுடா செல்லம்

  எதுடா செல்லம்

  இதேபோல் ஆர்யா படத்தில் ஸ்னேக் பாபு என்ற கேரக்டரில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அந்தப் படத்தில் பாவனாவிடம் அவர் பேசும் காதல் வசனங்கள் பெரும் ஹிட்டானது. எதுடா செல்லம் உன்ன லைக் பண்ண வச்சுது என்ற காதல் ரசம் சொட்ட சொட்ட அவர் பேசும் டயலாக் இன்றும் ட்ரோல் வீடியோக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  English summary
  Comedy King Vadivelu celebrates his birthday today. His famous dialogues are still in trending among youths.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X