»   »  தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத குடுப்பினை இது!- பூரிக்கும் வடிவேலு

தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத குடுப்பினை இது!- பூரிக்கும் வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேரே சப்னே கே ராணி... இந்தப் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, இசையும் பாடலும் அதைப் பாடுபவரின் குரலும் இப்போது கேட்டாலும் கிறங்கடிக்கிறது. மனசும் உடம்பும் துள்ளுகிறது.

ஆராதனாவில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர்கள் மேதைகள் எஸ்டி பர்மனும் அவர் மகன் ஆர்டி பர்மனும். குறிப்பாக அந்தப் பாடலில் இடம்பெறும் மவுத் ஆர்கனை வாசித்தவர் ஆர் டி பர்மன்.


இந்தப் பாடலைப் பாடியவர் 'கடவுளுக்கே பிடித்த பாடகர்' என்று கொண்டாடப்படும் கிஷோர் குமார்.


எலி படத்துக்காக

எலி படத்துக்காக

டார்ஜிலிங்கின் மலையிலில் நாயகி ஷர்மிளா தாகூர் வர, அவரைப் பின்தொடர்ந்து ரயில் பாதைக்கு இணையாகச் செல்லும் தார்ச்சாலையில் திறந்த ஜீப்பில் நாயகன் ராஜேஷ் கன்னாவும் அவர் நண்பரும் பாடியபடி வருவார்கள்.


எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் துள்ளாத மனங்களைத் துள்ள வைக்கும் அந்தப் பாடல்தான் வடிவேலுவின் எலி படத்தில் முழுமையாக இடம் பெற்றுள்ளது.
கிஷோர் குமார் குரல்

கிஷோர் குமார் குரல்

கிஷோர் குமார் குரலுக்கு திரையில் வாயசைக்கும் பாக்கியம் வடிவேலுவுக்குக் கிடைத்துள்ளது. அவருடன் அந்தக் கால நாயகி மாதிரி ஒப்பனையுடன் தோன்றி ஆடுகிறார் சதா.


செய்தியாளர்களுக்கு

செய்தியாளர்களுக்கு

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தப் பாடலை திரையிட்டுக் காட்டினார். ஆராதனா படத்தில் இடம்பெற்ற இன்னொரு சூப்பர் ஹிட் பாடலான கோர காகஸ்தா ஹே மன் மேரா... பாடலின் ஆரம்ப ஹம்மிங்கையும் இதில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.


கைத்தட்டிப் பாராட்டு

கைத்தட்டிப் பாராட்டு

பாடல் ஆரம்பித்து முடியும் வரை ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு பேரமைதியுடன் பாடலை ரசித்த அனைத்து பத்திரிகையாளர்களும், பாடல் முடிந்ததும் ஒரு சேர கைத் தட்டிப் பாராட்ட, வடிவேலு நெகிழ்ந்து போனார். "அண்ணே... பத்திரிகைக்காரங்க கைத்தட்டி இன்னைக்குதாண்ணே பாக்குறேன்,' என்றார் பரவசமாய்.


வாய்ப்பு

வாய்ப்பு

பின்னர் அவரிடம், தமிழ் சினிமாவில் கிஷோர் குமார் ஒரு பாடல் கூட பாடவில்லை. இன்றைய நடிகர்களில் ரஜினி, கமல் தவிர வேறு யாருக்கும் அவர் குரலுக்கு (இந்தியில்) வாயசைக்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை. உங்களுக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைத்துவிட்டதே?' என்றோம்.


குடுப்பினைதாண்ணே

குடுப்பினைதாண்ணே

அதற்கு பதிலளித்த வடிவேலு, "உண்மைதாண்ணே, பர்மன் மியூசிக்ல, கிஷோர் குமார் குரல்ல நான் ஒரு பாட்டுக்கு வாயசைச்சு ஆடியிருக்கேன்னு நெனக்கவே பெருமையா இருக்கு. இதெல்லாம் ஒரு குடுப்பினை... இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் சொல்லிக்கொடுத்து ஆட வச்சாங்க தாரா மாஸ்டர். என்ன ஒரு பாட்டு, இசை.. எத்தனையோ வருஷம் கழிச்சிக் கேட்டாலும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்குண்ணே...," என்றார்.


English summary
Comedian Vadivelu has got a rare chance of giving lip movement vto legendary singer Kishore Kumar's voice in Eli movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil