Don't Miss!
- News
கொலை மிரட்டல்.. பயமா இருக்கு.. அதிமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த திமுக எம்.எல்.ஏ.. அதிரடி ஆக்ஷன்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இதுக்கு மேலயும் இந்த ஊர் நம்பாது: இனி நோ ஹீரோ... ஒன்லி காமெடி தான்... ஆடி அடங்கிய வடிவேலு
சென்னை: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.
அதிகம் எதிர்பார்ப்புடன் ரிலீஸான இந்தப் படம், ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தது.
இதனால் அடுத்தடுத்த தனது படங்கள் குறித்து வடிவேலு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு
படம்
பாப்பீங்களா..
இல்ல
துணிவா..மழுப்பலாக
பதிலளித்த
வடிவேலு!

ஹீரோ ஆசையில் வைகைப்புயல
தமிழில் தனித்துவமான காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு, ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் தனது ஹீரோ ஆசையையும் தனித்துக் கொண்ட வடிவேலு, அதன்பிறகும் நடித்தால் நாயகன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். இதனையடுத்து சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த வடிவேலுவுக்கு, எதுவுமே கை கொடுக்கவில்லை. இதனிடையே 24ம் புலிகேசி படத்தில் கமிட்டான வடிவேலு, கால்ஷீட் பிரச்சினையால் ரெட் கார்டு பஞ்சாயத்து வரை சென்று மீண்டு வந்தார்.

நாய் சேகராக ரிட்டர்ன் ஆன வடிவேலு
ஒருவழியாக பஞ்சாயத்து எல்லாம் முடித்துவிட்டு, மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்தார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் ஹிரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து சரிவை சந்தித்தது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

முடிவை மாற்றிய கைப்புள்ள
லைகா தயாரித்த இந்தப் படம் தோல்வியை சந்தித்ததால் புதிய முடிவை எடுத்துள்ளாராம் வடிவேலு. அதன்படி பழைய ரூட்டுக்கே திரும்பிவிடலாம் என இருக்கிறாராம். அதன்படி, இனி ஹீரோவாக இல்லாமல் காமெடி கேரக்டரில் மட்டும் நடிக்கவுள்ளாராம். இருதினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த வடிவேலு, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இனி தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடிப்பேன் எனக் கூறினார். இப்போது அதோடு சேர்ந்து இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை எனவும் வைகைப்புயல்

இனி ஒன்லி காமெடி தான்
மேலும், இனிமேல் காமெடி கேரக்டரில் மட்டும் நடித்தால் போதும் எனவும் முடிவு செய்துள்ளாராம். அதேபோல் தன்னுடன் நடித்த பழைய நடிகர்களையும் புதிய காமெடி கூட்டணியில் இணைத்துக்கொள்வது என கூறியுள்ளாராம். ஹீரோவாக நடித்து மார்க்கெட்டை இழப்பதைவிடவும், காமெடியனாக நடித்து இருப்பதை தக்க வைத்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. உதயநிதியுடன் மாமன்னன், ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2 படங்களில் நடித்து வரும் வடிவேலு, இனிமேல் காமெடி கேரக்டரில் மட்டுமே நடிக்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பான டாப்பிக்காக வைரலாகி வருகிறது.