»   »  மருதுவில் ராதாரவியுடன் இணைவாரா வடிவேலு?

மருதுவில் ராதாரவியுடன் இணைவாரா வடிவேலு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கட்டிப்பிடித்து உருளாத குறையாக நடிகர் சங்கத் தேர்தலில் எதிரும் புதிருமாக நின்ற விஷாலும் ராதாரவியும், அப்படி ஒரு சமாச்சாரமே நடக்காத மாதிரி கைகோர்த்து விட்டார்கள் மருது படத்தில்.

இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதுவரை ராதாரவி வேறு எந்தப் படத்திலும் வாங்காத பெரும் தொகையை இப்படத்தில் சம்பளமாகத் தருகிறாராம் விஷால்.

Vadivelu hesitates to act with Radharavi

இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்த இன்னொரு முக்கியப் புள்ளி வடிவேலு. ஒரு இடைவெளிக்குப் பிறகு காமெடியனாக விஷாப் படத்திலிருந்து களமிறங்க முடிவு செய்திருந்தார்.

இப்போது ராதாரவி நடிக்கும் சமாச்சாரம் தெரிந்ததும், தனது முடிவை மாற்றிக் கொண்டாராம் வடிவேலு. நடிகர் சங்கத் தேர்தலில் கட்டடத்தைக் காணோங்க என்று ராதாரவி குரூப்பை பெரிய அளவில் கலாய்த்தவர் வடிவேலு. அதனால் இந்தத் தயக்கமாம்.

அதெல்லாம் பாக்காதீங்க வடிவேலு.. ஹீரோவும் வில்லனுமே காம்ப்ரமைஸான பிறகு... காமெடியன்தானே நீங்க.. கண்டுக்காம போய் கலக்குங்க, காமெடியில்!

English summary
Sources say that comedian Vadivelu is hesitating to acting with Radharavi in Vishal's Maruthu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil