»   »  ஷங்கரின் 2.0 படத்தில் சந்திரமுகி மேஜிக்கா?

ஷங்கரின் 2.0 படத்தில் சந்திரமுகி மேஜிக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.0 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியன.


Vadivelu is not part of Rajini's 2.0

வடிவேலு கடைசியாக ரஜினியுடன் சேர்ந்து குசேலன் படத்தில் நடித்திருந்தார். ஷங்கரின் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த படம் முதல்வன். சந்திரமுகியில் ரஜினியும், வடிவேலும் கலக்கியதால் 2.0 படத்தில் அவர்கள் கூட்டணி சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இது குறித்து விசாரித்தபோது 2.0 படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வடிவேலு நடிப்பில் வெளியான கத்தி சண்டை படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிப்பார்த்தனர்.


வடிவேலுவின் திறைமையை சுராஜ் வீணடித்துவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
Vadivelu is not part of Rajinikanth starrer 2.0 being directed by Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil