»   »  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக வடிவேலு... விஷால் படத்தில் நடிக்கிறார்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக வடிவேலு... விஷால் படத்தில் நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பாடா.. ஒரு வழியாக இறங்கி வந்திருக்கிறார் வடிவேலு. நடிச்சா ஹீரோதாண்ணே என்று கூறிக் கொண்டிருந்த மனிதர் இப்போதுதான் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்.

இந்தப் புதிய முடிவின்படி அவர் நடிக்கப் போகும் முதல் படம் கத்தி சண்டை (வழக்கமான சினிமா சென்டிமென்ட்படி ச் ஒற்றெழுத்து மிஸ்ஸிங்). தலை நகரம், மருதமலை படங்களில் வயிறு வலிக்க அவர் காமெடி பண்ணக் காரணமாக இருந்த இயக்குநர் சுராஜுடன் மீண்டும் 'பழம் விட்டு' இந்த கத்தி சண்டையில் நடிக்கிறார்.

Vadivelu joins with Vishal in Kaththi Sandai

இந்தப் படத்தின் நாயகன் விஷால். ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த எஸ் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

திமிரு படத்துக்குப் பிறகு விஷாலுடன் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் வடிவேலு.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

English summary
Ace comedian Vadivelu is doing comedy roles again in big heroes movies. Recently he has signed for Vishal starrer Kaththi Sandai directed by Suraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil