»   »  'எலியைப் பார்த்து பயிற்சி எடுத்தார் வடிவேலு...' - இயக்குநர் சொல்லும் சுவாரஸ்யங்கள்

'எலியைப் பார்த்து பயிற்சி எடுத்தார் வடிவேலு...' - இயக்குநர் சொல்லும் சுவாரஸ்யங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எலி படத்துக்காக ஒரு எலியாகவே மாறிவிட்டாராம் வடிவேலு. இதற்காக எலியைப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

தெனாலிராமனுக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் புதிய படம் எலி. கோடை ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கிறது.

படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்து சுவாரஸ்யமாக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கள்ளக் கடத்தல் பின்னணி

கள்ளக் கடத்தல் பின்னணி

படத்தின் கதை 1960-களில் நடப்பது போல எழுதப்பட்டுள்ளதாம். கள்ளக் கடத்தலை பிரதானமாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுத்திருக்கிறாராம் யுவராஜ்.

கதை குறித்து யுவராஜ் இப்படிக் கூறுகிறார்:

கதை குறித்து யுவராஜ் இப்படிக் கூறுகிறார்:

"நல்லவங்க கூட்டத்துல ஒரு தப்பானவன் நுழைந்தால் அவனை கருப்பு ஆடு என்று சொல்வோம். அதுபோல் கெட்டவங்க கூட்டத்துல ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால் ஒரு எலி மாட்டிக்கிச்சுன்னு சொல்வோம். அதுபோல், இந்த படத்திலும் ஒரு கெட்டவங்க கூட்டத்துல போய் நுழைஞ்ச வடிவேலு, அவங்ககிட்ட படும் இம்சைகளை காமெடியாக சொல்லியிருக்கிறோம்.

எலியாகவே மாறி...

எலியாகவே மாறி...

இப்படத்திற்காக எலியாகவே மாறி நடித்திருக்கிறார் வடிவேலு. எலி போன்று குறும்புத்தனங்களை செய்வதற்காக எலியை பார்த்து நிறைய பயிற்சிகளை எடுத்து நடித்துக் கொடுத்துள்ளார் வடிவேலு.

தமாஷான காதல்

தமாஷான காதல்

சதா கிளப் டான்சராக வருகிறார். சதாவுக்கும் வடிவேலுவுக்கும் இடையே வரும் காதல் காட்சிகளை ரொமான்டிக்காக சொல்லாமல், அதையும் நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறோம். வடிவேலுவுக்கு இதில் இரட்டை வேடம் எல்லாம் கிடையாது. ஒரே வேடம்தான் ஆனால், வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் வருவார்.

எலி சண்டை

எலி சண்டை

இப்படத்தில் இரண்டு சண்டைக்காட்சிகள் உள்ளன. இந்த சண்டைக் காட்சிகளில் ஹீரோயிசம் எதுவும் இல்லை. எலி எப்படி தன்னுடைய எதிராளியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுமோ அதுபோல் வடிவேலுவும் எதிராளிகளைத் தாக்காமல், அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களை இம்சைப்படுத்துவது போன்று ரொம்பவும் காமெடியாக அமைத்துள்ளோம்.

ரூ 1 கோடிக்கு செட்

ரூ 1 கோடிக்கு செட்

இப்படத்திற்கு தோட்டாதரணி பிரம்மாண்ட முறையில் செட் அமைத்து கொடுத்துள்ளார். 1960 காலகட்டங்களை நினைவுபடுத்தும் வகையில் இப்போது எங்கும் படமாக்க முடியாதபடியால் பெரும்பாலான காட்சிகளை செட் அமைத்தும், கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டும் உருவாக்கியுள்ளோம். வடிவேலு-சதா இணைந்து நடனமாடும் ஒரு கிளப் பாடலை சுமார் ரூ.1 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து படமாக்கியுள்ளோம்.

வடிவேலு பாட்டு

வடிவேலு பாட்டு

இப்படத்திற்கு வித்யாசாகர் 3 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். கதை நடக்கும் காலகட்டத்துக்கு ஏற்ப அருமையாக இசையமைத்துள்ளார் வித்யாசாகர்," என்றார்.

English summary
Yuvaraj Dhayalan, the director of Vadivelu's Eli has shared his experience with Media. He says that Vadivelu was literally learning many things from a rat for the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil