»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கோவை சரளா என்ற பெயரைக் கேட்டாலே வடிவேலு கடுப்பாகி விடுகிறாராம்.

அவரை சமீபத்தில் படத்திற்குப் புக் செய்யப் போன ஒரு தயாரிப்பாளர், உங்களுக்கு ஜோடியா கோவை சரளாவைபுக் செய்யலான்னு இருக்கோம் என்று சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான், கொந்தளித்து விட்டாராம் வடிவேலு.

ஒரு புகைப்பட ஆல்பத்தைத் தூக்கிப் போட்டு இதுல எதையாவது புக் பண்ணுங்க, இன்னொரு தடவை சரளா,அப்படின்னு பெயரை சொன்னா அவ்வளவுதான், என்ன சின்னப்புளத்தனமா இருக்கு என்று கேட்டுகராகாட்டமே ஆடி விட்டாராம்.

இன்னக்கி வந்த பய எல்லாம், புதுசு புதுசா வர்ற இளவட்ட பொண்ணுங்க கூட நடிக்கும்போது, எனக்கு ஏன்கோவை சரளாவைப் போடனும் என்று கேட்டாராம்.

பயந்து போன தயாரிப்பாளர் நீங்க சொல்றதையே போட்டுறலாம்கோ என்று கூறி விட்டு ஓடி வந்து விட்டாராம்.

கோவை சரளாவுக்கும் விவேக்கும் இடையே டூ இருப்பது தெரியும், வடிவேலுவுக்கும் சரளாவுக்கும் இடையேமோதல் இருப்பது அந்தத் தயாரிப்பாளருக்குத் தெரியாது போலும்.

Please Wait while comments are loading...