»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலைய ஊழியர்களின் நடவடிக்கையால் கோபமடைந்த நடிகர் வடிவேலு, வசனம் போல் பேசிபரபரப்பை ஏற்படுத்தினார்.

நேற்று மாலை 6 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ஜெட் ஏர்வேஸ்விமானத்தில் வடிவேலு தனது மகனுடன் செல்ல இருந்தார். இவர்களுக்கு போர்டிங் பாஸ் வாங்கித் தர உதவிஇயக்குனர் கிருஷ்ணன் விமான நிலையத்துக்கு வந்தார்,

அவர் வடிவேலுவின் பயணச் சீட்டு வைத்திருந்தால் விமான பாதுகாப்புப் படையினர் நுழைவுச் சீட்டு இல்லாமலேஅவரை தவறுதலாக உள்ளே அனுமதித்துவிட்டனர். ஆனால், விமான நிலையத்தின் வேறு பகுதியில் இருந்தஅதிகாரி கிருஷ்ணனிடம் நுழைவுச் சீட்டு இருக்கிறதா என்று கேட்டார் .

வடிவேலுவின் போர்டிங் பாஸ் போட வந்துள்ளேன். என்னிடம் நுழைவுச் சீட்டு இல்லை என்று கிருஷ்ணன்கூறினார். இதையடுத்து நுழைவுச் சீட்டு இல்லையென்றால், யாராக இருந்தாலும் ரூ,500 அபராதம் கட்ட வேண்டும்என அதிகாரி கூறியதால், கிருஷ்ணன் அபராதம் கட்டினார்.

இதையடுத்து விமான நிலையம் வந்த வடிவேலு நடந்த சம்பவத்தைக் கேட்டு டென்சன் ஆனார்.

அபராதம் விதித்த அதிகாரியிடம் சென்று, நுழைவுச்சீட்டு இன்றி வந்ததற்காக அபராதம் வசூலித்திருக்கிறீர்கள்.அரசுக்குப் பணம் தருவதில் எந்த ஆட்சபணையும் இல்லை. ஆனால் இப்போது விமான நிலையத்தில் உள்ளஅனைவரும் நுழைவுச் சீட்டுடன்தான் இருக்கிறார்களா? எல்லோரையும் சோதனை போட நீங்கள் தயாரா?

நடிகர்கள் என்றால் ஏமாளிகளா? எங்களிடமே நடிக்காதீர்கள். உங்கள் சக அதிகாரி கடமையைச் சரியாகச்செய்யாததால் தான் உதவி இயக்குனர் தவறுதலாக உள்ளே நுழைய நேரிட்டது. உங்கள் சக அதிகாரி மீதுநடவடிக்கை எடுக்கத் தயாரா?. அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்காதீர்கள் என்று கேள்விகளை அடுக்கினார்.

வடிவேலுவின் கேள்விகளால் தலைசுற்றிய அந்த அதிகாரி, அபராத் தொகையில் ரூ.200 குறைப்பதாகக் கூறி,அதைத் திருப்பித் தந்தார். ஆனால், பணத்தை வாங்க மறுத்த வடிவேலு கோபத்துடன் விமானமேறி மதுரைபுறப்பட்டார்.

பின்னர், அதிகாரியின் வற்புறுத்தலால் 200 ரூபாயை கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். வடிவேலு விட்ட சவுண்டுகாரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் சினிமா நடிகர்கள் மோதும் வாரம் போலிருக்கிறது. சிம்ரன், அவரதுகாதலர் நடத்திய கலாட்டாவைத் தொடர்ந்து மீனம்பாக்கத்தில் வடிவேலுவும் மோதியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil