twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா: வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை?…

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னையில் நடைபெறும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிகழ்ச்சியின் முழு நிகழ்ச்சியும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கலைநிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமையை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனத்திடம் கொடுத்து பின்னர் பறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வடிவேலு தொடர்ந்து திரைப்படங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விழாவிலும் அவருக்கு தடை வந்துள்ளது.

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா

    இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னையில் தென்னிந்திய திரைப்படத்துறையின் சார்பில் செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாள்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

    ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

    விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஒட்டுமொத்த நட்சத்திரங்களும்

    ஒட்டுமொத்த நட்சத்திரங்களும்

    23 ஆம் தேதி ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    இதில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்தும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திரங்கள் பங்கேற்றும் களை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

    வடிவேலுவுக்கு தடை

    வடிவேலுவுக்கு தடை

    இதனிடையே இயக்குநர் டி.பி. கஜேந்திரனும், நடிகர் வடிவேலுவும் இணைந்து ஒரு காமெடி நிகழ்ச்சி செய்ய தயார் செய்திருந்தனராம். இதற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வில்லையாம்.

    ஜெயா டிவிக்கு ரைட்ஸ்

    ஜெயா டிவிக்கு ரைட்ஸ்

    நூற்றாண்டு சினிமா விழாவை அரசே ஏற்று நடத்துவதால் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு ஒளிபரப்பு உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராதிகாவிடம் கொடுத்து பின்னர் பறிப்பு

    ராதிகாவிடம் கொடுத்து பின்னர் பறிப்பு

    ராடானிடம் கலை நிகழ்ச்சி பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது பறிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ9 கோடிக்கு சன் டிவியிடம் ஒளிபரப்பு உரிமை கொடுக்கப்பட்டது. அதை ஜெயா டிவி ரூ6 கோடி கொடுத்து பறித்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆந்திராக்காரர்கள் மட்டும் ஆப்சென்ட்

    ஆந்திராக்காரர்கள் மட்டும் ஆப்சென்ட்

    தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திரா திரை உலகத்தினர் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 24 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சாதனையாளர்கள் கௌரவப்படுத்தப்படுகிறார்கள்.

    வருகிறார் பிரணாப்

    வருகிறார் பிரணாப்

    இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். இவ்விழாவையொட்டி18 முதல் 24 ஆம் தேதி வரை படப்படிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    English summary
    Sources say that Vadivelu's comedy programme has been cancelled in TN govt sponsored Indian cinema centenary function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X