விவேக் இருந்தா நான் இப்படி கெஞ்சிருக்க மாட்டேன்னு கதறிய போண்டா மணி.. நான் இருக்கேன்னு சொன்ன வடிவேலு!
சென்னை: காமெடி நடிகர் போண்டா மணி தனது இரு சிறுநீரகங்களும் ஒட்டுமொத்தமாக செயலலிழந்த நிலையில், பரிதாபமான நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும், பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் வாழும் வாழ்க்கையை தினக்கூலி சினிமா கலைஞர்கள் வாழ்வதில்லை என்பது தான் நிதர்சணம்.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டா மணி தனக்கு சினிமா பிரபலங்கள் யாரும் உதவவில்லை என கண்ணீர் மல்க பேசிய நிலையில், நடிகர் வடிவேலு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

மருத்துவமனையில் போண்டா மணி
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் காமெடி நடிகர் போண்டா மணி. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சினிமா பிரபலங்கள் யாராவது உதவ வேண்டும் என சமீபத்தில் கண்ணீர் மல்க அவர் கோரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ ரசிகர்களை உருக வைத்துள்ளது.

விவேக் சார் இருந்திருந்தா
காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் போண்டா மணி. கடந்த ஆண்டு நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்து விட்ட நிலையில், தன்னுடைய இந்த நிலைமையை சரி செய்ய யாருமே முன் வரவில்லை. அவர் இருந்திருந்தா இந்நேரம் ஓடோடி வந்து உதவி செஞ்சிருப்பாருன்னு உருக்கமாக பேசி உள்ளார்.

குடும்ப கஷ்டம்
வடிவேலுவுடன் இணைந்து பல ஹிட் காமெடி காட்சிகளில் நடித்த போண்ட மணிக்கு வடிவேலு சினிமாவில் நடிக்க தடை விதித்த நிலையில், எந்தவொரு சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் வறுமையில் வாடி வந்தார். வாடகை வீட்டில் மாற்றுத் திறனாளி மனைவி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை நல்லா படிக்க வைக்க வேண்டும் என நினைத்து சாக்கடையில் கூட ஒரு படத்துக்கு இறங்கி நடித்ததன் விளைவு தான் இப்படியொரு பிரச்சனைக்கு அவரை ஆளாக்கி உள்ளது.

உதவி செய்ய வடிவேலு ரெடி
இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என பிசியாகி உள்ள வடிவேலுவிடம் போண்டா மணிக்கு உதவி செய்வீங்களா என செய்தியாளர்கள் கேட்ட நிலையில், அவருக்கு என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வேன் என உறுதி அளித்துள்ளார். கூடிய விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் போண்டா மணி வீடு திரும்பினாலே ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.


Click it and Unblock the Notifications











