»   »  வடிவேலுவும் சூரியும் பின்னிட்டாங்க! - கத்தி சண்டை இயக்குநர்

வடிவேலுவும் சூரியும் பின்னிட்டாங்க! - கத்தி சண்டை இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கத்தி சண்டை படத்தில் வடிவேலுவும் சூரியும் காமெடியில் பின்னி விட்டார்கள் என்று இயக்குநர் சுராஜ் கூறினார்.

Vadivelu rocks in Kaththi Sandai - Director Suraj

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் கத்தி சண்டை படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். இருவரும் இணையும் முதல் படம் இது.


Vadivelu rocks in Kaththi Sandai - Director Suraj

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் சுராஜ்.


படம் பற்றி சுராஜ் கூறுகையில், "இந்தhd படத்தை அக்ஷன், காமெடி , செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி உள்ளோம்.. 50 சதவீதம் காமெடி, 50 சதவீதம் ஆக்ஷன். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.


Vadivelu rocks in Kaththi Sandai - Director Suraj

வடிவேலும் சூரியும் காமெடியில் பின்னி இருகிறார்கள். தலைநகரம், மருதமலை படங்களுக்கு பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்பை காண முடிகிறது.


இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் தனது சிறப்பான இசையால் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். படிக்காதவன் படத்திற்கு பிறகு தமன்னாவும் நானும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம் அவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்," என்றார்.

English summary
Director Suraj says that after a long gap Vadivelu is rocking in comedy sequences in Kaththi Sandai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil