வடிவேலு ஸ்டைல் உலகம் முழுக்க பரவுதே.. தென் கொரியாவில் நடப்பதை பாருங்க.. அய்யோ அய்யோ
சென்னை: வைகை புயல் என்று கொண்டாடப்படும் வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த மாரீசன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்தாக அவர் கமிட்டாகியிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தென் கொரியாவில் நடக்கும் ஒரு விஷயம் வடிவேலுவின் காமெடியை ஒத்திருப்பது ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
வடிவேலு என்றால் பெரிய அறிமுகமெல்லாம் தேவையில்லை. தனது காமெடியின் மூலம் 24 மணி நேரமும் நம்முடன் கலந்திருப்பவர் அவர். அவரது கரியர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது விஜயகாந்த்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் அரசியல் மேடை ஏறினார். ஆனால் அந்த அந்த மேடையே அவரது மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளியது. இதனால் சில வருடங்கள் சினிமா வாசமே இல்லாமல் இருந்தார்.
ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அவர் சந்திரமுகி 2, மாமன்னன், கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன், மாரீசன் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட்டடித்தன. மேலும் அந்தப் படங்களில் அவர் காமெடி ரோல் மட்டும் செய்யாமல் கதைக்கும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.

வடிவெலு காமெடிதான் எல்லாம்: வடிவேலு காமெடியை தவிர்த்துவிட்டு ஒரு நாள் ரசிகர்க்ளுக்கு நகராது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தபோதுகூட அனைத்து காமெடி சேனல்களிலும் அவர்தான் இருந்தார். முக்கியமாக மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு கிரியா ஊக்கியாகவும் அவர் திகழ்ந்துகொண்டிருக்கிறார். இதனால் வைகை புயலுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது அவரது ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை.
கொரோனா காலத்தில் ட்ரெண்ட்: அதேபோல் கொரோனா லாக் டவுன் சமயத்தில் ப்ரெண்ட்ஸ் படத்தில் அவர் செய்திருந்த நேசமணி கதாபாத்திரத்தை பகிரப்பட்ட மீம் ஒன்றும் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி; யார் அந்த நேசமணி என்ற மற்ற நாட்டுக்காரர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இதுபோன்று வரலாற்றில் வடிவேலுவுக்கு மட்டுமே நடந்திருக்கிறது. இந்நிலையில் தென் கொரியாவில் நடந்திருக்கும் விஷயம் ஒன்று வடிவேலுவின் காமெடியை ஒத்திருக்கிறது.
என்ன காமெடி: கற்க கசடற திரைப்படத்தில் வடிவேலு சும்மா இருப்பதை ஒருவர் நக்கல் செய்ய; சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என சொல்லி சவால் விட்டு சும்மா இருந்து காமி என அந்த நகைச்சுவை காட்சி இருக்கும். தற்போது தென் கொரியாவில் அதேபோல் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அதாவது அந்த நாட்டில் Doing Nothing Festival என்கிற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.
அதில் பங்கேற்பவர்கள் கைப்பேசி, புத்தகம், இசை என எதுவுமே இல்லாமல் சுமார் 90 நிமிடங்கள் அமைதியாக உட்கார வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறதாம். பலரும் ஆர்வத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சும்மா இருக்கிறார்களாம். இதனைப் பார்த்த ரசிகர்களோ, வடிவேலு பாணி உலகம் முழுவதும் பரவுதே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்து வைகை புயலை கொண்டாடிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











