»   »  குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!

குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் வடிவேலுவின் எலி, குழந்தைகளைக் குதூகலப்படுத்த இந்த கோடையில் வெளியாகிறது.

வடிவேலு - யுவராஜ் தயாளன் இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படம், 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய படபிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

பின்னி மில் வளாகத்தில் ஆடம்பர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிகணக்கான செலவில், கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனகாட்சிகள் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அழகிகள் ஆட்டம்

அழகிகள் ஆட்டம்

மேலும் பல கோடி ருபாய்க்கும் செலவில் நடனவீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக, புகழ்பெற்ற மும்பை நடன அழகிகள் ஆட, பிரபல நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது.

ஜோடி சதா

ஜோடி சதா

இந்தப் படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை சதா. கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்கிறார். சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும்.

காமெடிதான் காமெடிதான்

காமெடிதான் காமெடிதான்

தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது.

குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் பார்க்கும் வண்ணம் நகைச்சுவைக்கும் மட்டுமே முதலிடம் தந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்த கோடையில் 1000-க்கும் அதிகமாக அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது.

பூனை - எலி துரத்தல் மாதிரி சண்டை

பூனை - எலி துரத்தல் மாதிரி சண்டை

இந்தப்படத்தில் புகழ்பெற்ற சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாளிக்குமோ, அந்த டைப்பில் சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியில், வைகைபுயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறாராம்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

உலகில் யாரும் இதுவரை செய்திராத வடிவேலுவின் எலி நடிப்பு குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

படத்தில் வடிவேலுவின் ஆஸ்தான நடிகர்கள் வெங்கல்ராவ், போஸ் வெங்கட், பாவா லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, பூச்சி முருகன், மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் உள்ளனர்.

வித்யாசாகர்

வித்யாசாகர்

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர். புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை வசனம் இயக்குகிறார் யுவராஜ் தயாளன்.

English summary
Yuvaraj - Vadivelu's next comedy flick Eli will be releasing this summer in 1000 plus screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil