»   »  15 கோடி பட்ஜெட்டில் தயாராகும் வடிவேலுவின் ‘எலி’

15 கோடி பட்ஜெட்டில் தயாராகும் வடிவேலுவின் ‘எலி’

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடித்தால் ஹீரோவாக என்ற முடிவில் உறுதியாக இருப்பவர், எலி என்ற படத்தில் நாயகனாகியிருக்கிறார் வடிவேலு. இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி வெற்றியின் ஹேங்ஓவரிலிருந்து இன்னும் விடுபடாமலே இருக்கும் வடிவேலு. இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் என இரு காஸ்ட்லி தோல்விகளுக்குப் பிறகும் தனது சொல்பேச்சு கேட்கும் யுவராஜையே மீண்டும் இயக்குனராக்கி எலியை எடுத்து வருகிறார்.

தெனாலிராமன் தோல்வியால் தெறித்து ஓடிய தயாரிப்பாளர்களை கண்டு கொள்ளாத வடிவேலு, மதுரையில் ஓட்டல் நடத்தும் ஒரு நபரை பிடித்து இப்போது எலி படத்தை தயாரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு.


என்ன கதை

என்ன கதை

துப்பறியும் உளவாளியாக மாறுவேடத்தில் எலிபோல நுழைகிறார் வடிவேலு. அவர் புத்திசாலித்தனமாக செய்வதெல்லாம் மொக்கையாகிறது. இதுவே காமெடியாக முடிகிறது.


டூயட் ரொமான்ஸ்

டூயட் ரொமான்ஸ்

வடிவேலுக்கு இந்தப் படத்தில் டூயட் ரொமான்ஸ் எல்லாம் உண்டாம். படத்தின் பட்ஜெட்டும் காஸ்ட்லி என்கின்றனர்.


வெள்ளைக்கார டான்சர்கள்

வெள்ளைக்கார டான்சர்கள்

போஸ்டரே ரிச் லுக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைக்கார டான்சர்களுடன் நடனமாடும் வடிவேலு தனது பழைய திறமையை இதில் நிரூபிப்பாரா என்பது தெரியவில்லை.


15 கோடி பட்ஜெட்

15 கோடி பட்ஜெட்

படத்தை 15 கோடியில் தயாரிக்கிறார்கள். வடிவேலுவுக்கு மட்டும் 7 கோடி சம்பளமாம். இதற்கு முன்பு வடிவேலு நாயகனாக நடித்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் எலி தயாராகிறது.


சம்பாதிக்குமா எலி

சம்பாதிக்குமா எலி

எலி பதினைந்து கோடியை சம்பாதிக்குமா இல்லை மதுரையைச் சேர்ந்த அப்பாவி தயாரிப்பாளரை கடனாளியாக்குமா?


English summary
Vadivelu is back in action with Eli, being directed by Yuvraj Dayalan. The comedian, who is playing the lead in the film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil