»   »  போடா போடா போடா டேய்.. உங்க பல்லைக் குத்தி நீங்களே மோந்து பாக்காதீங்க.. வடிவேலு "பொளேர்"!

போடா போடா போடா டேய்.. உங்க பல்லைக் குத்தி நீங்களே மோந்து பாக்காதீங்க.. வடிவேலு "பொளேர்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் "பாண்டவர் அணி" சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலுவின் பேச்சில், சமீபத்தில் வெளியான அவரது படத்தில் கூட இல்லாத அளவுக்கு "வசனத்தில்" அனல் பறந்தது.

சரத் குமார் தரப்பு அணியினரை போட்டு வாங்கினார் வடிவேலு தனது பேச்சில். மேலும் பாண்டவர் அணியே வெல்லும் என்றும் டேபிளை அடித்துக் கூறினார் வடிவேலு.

வடிவேலுவின் பேச்சிலிருந்து...

நடிகர் சங்கத்தைக் காணோம்யா

நடிகர் சங்கத்தைக் காணோம்யா

நான் படத்தில் கிணத்தைக் காணோம்னு வசனம் பேசினேன். ஆனால் இன்று பல ஊர்களில் கிணத்தைக் காணோம், ஊரணியைக் காணோம், ஆத்தைக் காணோம், மலையைக் காணோம். நமக்கு நடிகர் சங்கத்தையே காணோம்.

தரைமட்டமாக்கிட்டாங்களே

தரைமட்டமாக்கிட்டாங்களே

இன்றைக்கு நடிகர் சங்கத்தையே காணாமல் தவித்துப் போயுள்ளோம். அதைக் கண்டுபிடிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம். அப்படியே தரைமட்டமாக்கிட்டாங்களே சங்கத்தை.

ஆத்தீ...!

ஆத்தீ...!

தயாரிப்பாளர் ஒருவரைப் பார்க்கப் போனேன். ஒரு இடத்தைக் காட்டி இது என்னன்னு தெரியுமா என்று கேட்டார். என்னங்க இது என்று கேட்டேன். அது தரைமட்டமான ஒரு இடம். இங்கதாய்யா உங்க நடிகர் சங்கம் இருந்துச்சு. இடிச்சு அள்ளிட்டுப் போயிட்டாங்க என்றார். அதைக் கேட்டு ஆத்தீ என்று அதிர்ந்து போயிட்டேன்.

சந்து மாறி வந்துட்டோமோ?

சந்து மாறி வந்துட்டோமோ?

நான் கூட சந்து மாறி வந்துட்டோமோன்னு நினைச்சேன். அந்த அளவுக்கு துடைச்சு எடுத்துட்டுப் போயிட்டாங்க. யார் கேட்டாலும் மரியாதைக் குறைவா பேசுறது, அசிங்கம் அசிங்கா, தப்புத் தப்பா பேசுறது. வீடியோவுல பார்த்தேன். காட்டுனாங்க.

போடா டேய் போடா போடா

போடா டேய் போடா போடா

எதையுமே கேட்காமல் யார் சொல்லியும் கேட்காமல் நாசக்காடாக்கி, சர்வநாசமாக்கி விட்டனர். ஏதாவது கேட்டால் போடா போடா போடா டேய் என்று பேசுகிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.

ரவுடியிசமா?

ரவுடியிசமா?

இது என்ன நடிகர் சங்கமா இல்லை ரவுடியிசமா. நாங்களும்தான் பேசுவோம். நாங்கெல்லாம் பேச ஆரம்பிச்சா.. எல்லாரும் பேசலாம்ல. கேள்வி கேட்கக் கூடாதா உங்களை. நாங்க கேட்க ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.

அசிங்கம் அசிங்கமாக நோட்டீஸ் போட்டு

அசிங்கம் அசிங்கமாக நோட்டீஸ் போட்டு

குமரி முத்துவை அசிங்கப்படுத்துனாங்க. பூச்சி முருகனைப் பத்தி அசிங்கம் அசிங்கமாக நோட்டீஸ் போட்டு கெட்ட கெட்ட வார்த்தையால எழுதி.. என்னாங்கடா இது...

கிழிஞ்சிரும்ய்யா

கிழிஞ்சிரும்ய்யா

நாம நோட்டீஸ் அடிக்க மாட்டோமா. நாங்க அடிக்க ஆரம்பிச்சா கிழிஞ்சுரும் அப்புறம். வேண்டாம். உங்க பல்லைக் குத்தி நீங்களே மோந்து பாக்காதீங்க.

சாயந்திரத்துக்குள்ள ஓடி வந்திருங்க

சாயந்திரத்துக்குள்ள ஓடி வந்திருங்க

ஜெயிக்கப் போவது பாண்டவர் அணிதான். நாமதான். சாங்காலாத்துக்குள்ள நீங்களும் வந்து மேடைல இங்க வந்து ஏறிருங்க. கடையை மூடிட்டு வந்துருங்க. கடையே இல்லையே அங்க.

நான் மட்டும் ஏமாறலை

நான் மட்டும் ஏமாறலை

நான் சில விஷயத்துல ஏமாந்தேன். என்னைய ஏமாத்திட்டாங்க. உங்களுக்கே தெரியும். ஆனா இன்னிக்கு டோட்டல் நடிகர்களையும் அவங்க ஏமாத்திட்டாங்க. நான் ஏமாந்தது கொஞ்சம்தான். ஆனால் அத்தனை கலைஞர்களையும் ஏமாத்திட்டாங்க. டோட்டலா அவங்களை அடிக்கனும். எல்லாம் சேர்ந்து அடிக்கனும்.

நாலே நாலு பேர்

நாலே நாலு பேர்

நாமதான் ஜெயிக்கிறோம். இது உறுதி. நாலே நாலு பேர் தான் இருக்காங்க அங்க. அவங்க அடிக்கிற அக்கப் போர் இருக்கே. மாமன், மச்சான், ரகளை, சகலையாம்.. என்னத்துக்கு கழுதையை. நாங்க உங்களைத் திட்டலை. நீங்கதான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டீங்க.

மானமாவது நஷ்டமாவது

மானமாவது நஷ்டமாவது

விஷால் மேல மான நஷ்ட வழக்காம். மானம்தான் போச்சே. அப்புறம் எதுக்கு மான நஷ்ட வழக்கு. வேண்டாம். பேசாம எங்க கூட வந்திருங்க. நாங்கதான் ஜெயிப்போம் ஜெயிப்போம் இது சத்தியம் சத்தியம் என்று பேசினார் வடிவேலு.

English summary
Actor Vadivelu blasted the Saratkumar team in the Vishal lead team's meeting held recently in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil