Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டிசம்பர் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் வடிவேலு… நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சென்னை: கோலிவுட்டின் டாப் காமெடி ஆக்டரான வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
லைகா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேவரைட் டைரக்டரான சுராஜ் இயக்கியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திடீரென அவசரம் காட்டும் வடிவேலு… நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதி இது தானா?

மீண்டும் களத்துக்கு வந்த வைகைப்புயல்
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி வரும் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியால், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டிய வடிவேலுவுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டது. மீண்டும் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு கமிட் ஆகியிருந்தார்.

ரெடியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
ஆனால், வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுத்தது தயாரிப்பாளர் சங்கம். இதனால், பல வருடங்களாக படங்கள் இல்லாமல் வீட்டில் இருந்த வடிவேலு இப்போது சுராஜ் இயக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் வடிவேலு மஜாவான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் ஷிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'அப்பத்தா சாங்' சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. பிரபுதேவா கோரியோகிராப் செய்திருந்த அப்பத்தா பாடலில் வடிவேலுவும் மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காமெடி விருந்துக்கு ரெடியா?
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வடிவேலுவின் ரசிகர்கள் இப்போதே படத்தை பார்க்க ஆர்வமாகிவிட்டனர். வடிவேலு - சுராஜ் காம்போ ஏற்கனவே வெரைட்டியான பல காமெடிகளை கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தனர். இப்போது வடிவேலுவே ஹீரோவாக நடித்து முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கும் என கேட்கவே வேண்டாம். சில வருடங்களாக படங்களில் வடிவேலுவை பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு, இந்தப் படம் டபுள் தமாக்கா ட்ரீட் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.