ஆட்டத்தை ஆரம்பித்த வைகை புயல்வடிவேலு..நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
சென்னை : வைகை புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியானது.
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் மற்றும் இடிஷ் பிரசாந்த் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து வரும் நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாய் ஒன்று முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறது.

வைகை புயல் வடிவேலு
தமிழ் சினிமாவில் வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமன்றி இவரது உடல் அசைவுகளை பார்த்தாலே போதும் குபீரென்று சிரிப்பு வந்துவிடும். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்
இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கம் இந்தப் படத்தை, சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். 2006-ல் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் நாய் சேகர். அந்த பெயர் அவருக்கு பக்காவாக பொருந்து போய், அந்த படத்தின் காமெடியும் மிரட்டலாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தை மனதில் வைத்தே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்க அப்பத்தா
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விவேக் பாடல் வரி எழுதி உள்ளார். வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். எங்க அப்பாத்தா என்று தொடங்கும் பாடலுக்கு வடிவேலு அட்டகாசமாக நடனமாடி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

ஓடிடி உரிமம்
மேலும், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரையரங்க வெளியீட்டுக்கான ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











