Don't Miss!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வடிவேலு கம்பேக்.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரைலர் ரிலீஸ்.. பிக் பாஸ் ஷிவானியும் இருக்காங்க!
சென்னை: இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி நாராயணன் நடிப்பில் உருவாகி உள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை கைவிட நடிகர் வடிவேலு தான் காரணம் என பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்க முடியாத அளவுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த பிரச்சனையை இந்த ஆண்டு லைகா நிறுவனம் தலையிட்டு தீர்த்து வைத்த நிலையில், லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
சன்னதிக்கு
காசு..
சாமிக்கிட்ட
க்ளோஸு..
வடிவேலு
பாடிய
நாய்சேகர்
ரிட்டர்ன்ஸ்
செகண்ட்
சிங்கிள்
ரிலீஸ்!

டைட்டில் சர்ச்சை
தலைநகரம் படத்தில் பிரபலமான நாய்சேகர் கதாபாத்திரத்தின் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க நினைத்த நிலையில், அதற்கு முன்னதாக சதீஷ் படத்துக்கு அந்த டைட்டில் வைகப்பட்டது. கடைசியில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில், வடிவேலு படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

வடிவேலு காட்டில் மழை
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நடிகர் வடிவேலுவுக்கு முதல் படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வெளியாகும் முன்னரே ஏகப்பட்ட பெரிய படங்களில் அவரை கமிட் செய்து விட்டனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தில் இவர் உதயநிதிக்கு அப்பாவாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்திரமுகி 2
பி. வாசு இயக்கத்தி ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் டபுள் மீனிங் காமெடிகள் வேற லெவலில் வொர்க்கவுட் ஆகின. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவையே பி. வாசு நடிக்க வைத்துள்ளார். சந்திரமுகி 2 மட்டுமின்றி வேறு சில பெரிய படங்களிலும் வடிவேலுவை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
டிரைலர் ரிலீஸ்
வரும் டிசம்பர் 9ம் தேதி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வடிவேலுவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், யூடியூப் விமர்சகர் பிரசாந்த், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.