Don't Miss!
- News
முட்டி மோதும் ஓபிஎஸ், எடப்பாடி.. "பாஜக குறியே வேற".. டெல்லி தயங்குவது ஏன்? - தராசு ஷ்யாம் ‘பளிச்’!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Naai Sekar Returns Review: மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு.. எப்படி இருக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்?
சென்னை: நடிப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம்.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, பிக் பாஸ் ஷிவானி, இட்டிஸ் பிரசாந்த், ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மீண்டும் சினிமாவில் வடிவேலு என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், நாய் சேகர் படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..
இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்... பாக்ஸ் ஆபிஸில் யார் மாஸ்... கம்பேக் கொடுப்பாரா வடிவேலு?

வடிவேலு சுப்ரீமேஸி
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் மூலம் மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவின் சுப்ரிமேஸி தீயாக உள்ளதாக இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஜீவாவுடன் போட்டி
தமிழ்நாட்டில் இன்று ஜீவாவின் வரலாறு முக்கியம் படத்துக்கும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கும் இடையே தான் போட்டியே என்றும் இந்த ஆண்டின் கடைசி பாக்ஸ் ஆபிஸ் கிளாஷாக இந்த வாரம் இருக்கும் என்றும் வடிவேலு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இட்டிஸ் பிரசாந்த தூக்கிட்டாங்க
சினிமா விமர்சகர் இட்டிஸ் பிரசாந்த் டிக்கிலோனா, எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்துள்ளார். இரண்டாவது பாதியில் அவரது காட்சிகளை கட் பண்ணி தூக்கிட்டாங்க.. முதல் பாதியில் கொஞ்சம் ஆர்வக் கோளாறாகவே நடித்துள்ளார் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

வடிவேலு காப்பாத்துறாரு
நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் தலைவனை தியேட்டரில் பார்க்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு.. ஒட்டுமொத்த படத்தையும் கடைசி வரை தாங்கிப் பிடித்து காப்பாத்துறாரு வடிவேலு.. குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரொம்பவே பிடிக்கும் என்பது கன்ஃபார்ம் என இந்த ரசிகர் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.