»   »  எனக்கு கேப்பும் கிடையாது.. ஆப்பும் கிடையாது... எப்பவும் டாப்புதான்! - வடிவேலு

எனக்கு கேப்பும் கிடையாது.. ஆப்பும் கிடையாது... எப்பவும் டாப்புதான்! - வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது. இந்த வடிவேலுவுக்கு எப்பவுமே டாப்புதான்.. என்று பேசினார் காமெடி நடிகர் வடிவேலு.

வடிவேலு காமெடியனாக நடிக்கும் கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Vadivelu's speech at Kaththi Sandai audio launch

இதில் படத்தின் நாயகன் விஷால், இசையமைப்பாளர் ஆதி, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் வடிவேல் பேசுகையில், "நான் ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்திருப்பதால் கேப் விழுந்துவிட்டதாக ரொம்பப் பேர் பேசினாங்க. எனக்கு கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. இந்த வடிவேலுவுக்கு எப்பவுமே டாப்புதான். இன்னிக்கும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் என எங்கும் என்னுடைய காமெடியைத்தான் பேசறாங்க. அரசியல் மேடைகளில் என்னுடைய காமெடிதான்.

நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

சுராஜ் என்னிடம் சொன்ன கதை மிகவும் பிடித்தது. கத்தி சண்டை என்றால் கத்தியால் சண்டை போடறதோ, அல்லது கத்தி கத்தி சண்டை போடறதோ இல்லை. இது புத்திச் சண்டை.

மேலும் விஷால் நடிப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். நானும் விஷாலும் இதற்கு முன் முதல் முறையா 'திமிரு' என்னும் படத்தில் நடித்தோம் இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து 'நடிகர் சங்கத்தை காணோம்' என்ற படத்தில் நடித்தோம். அதாவது நடிகர் சங்க தேர்தல். இதுவும் எங்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது. தற்போது 'கத்தி சண்டை' படத்தில் நடித்திருக்கிறோம். இது சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். காரணம் விஷாலின் நல்ல மனசு," என்றார்.

English summary
In Kaththi Sandai audio launch Vadivelu says that there is gap to him in Tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil