»   »  மேரே சப்னோ கே ராணி கப் ஆயே... பாட்டுக்கு ஆட்டம் போட்ட வடிவேலு- சதா

மேரே சப்னோ கே ராணி கப் ஆயே... பாட்டுக்கு ஆட்டம் போட்ட வடிவேலு- சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எலி படத்தில் வடிவேலுவும் சதாவும் ஒரு இந்திப் பாட்டுக்கு நடனமாடியுள்ளனர்.

அந்தப் பாடல், ராஜேஷ் கன்னா - ஷர்மிளா தாகூர் ஜோடியாக நடித்த ஆராதனா படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற மேரே சப்னோ கே ராணி..' என்ற பாடலாகும்.


70-களில் நடக்கும் கதை

70-களில் நடக்கும் கதை

சிட்டி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் யுவராஜ் இயக்கும் படம் ‘எலி'. வடிவேலு, சதா நடிப்பில் உருவாகி வரும் இப்படம் 60 -70 களில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. துப்பறியும் நிபுணராக வடிவேலு நடிக்கும் இப்படத்தில் சதா க்ளப் டான்சராக நடிக்கிறார்.


ஆராதனா பாட்டு

ஆராதனா பாட்டு

இப்படத்திற்காக 1969ம் ஆண்டு ராஜேஷ் கன்னா, சர்மிளா தாகூர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஆராதனா' படத்தின் பிரபலமான ‘மேரே சப்னோ கி ராணி' பாடலை டூயட் பாடலாக முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கான சரியான உரிமமும் பெற்றுள்ளனர் படக் குழுவினர்.


வடிவேலு - சதா

வடிவேலு - சதா

இந்த பாடலில் வடிவேலு, சதா நடனம் ஆடும் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதுதவிர்த்து வடிவேலு, சதா நடனத்தில் ‘கொள்ளை அழகு கொட்டி கிடக்கு' எனத் துவங்கும் க்ளப் பாடலும் இப்படத்தில் உள்ளதாம்.


தமாஷ் சண்டை

தமாஷ் சண்டை

மேலும் இப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை சூப்பர் சுப்புராயனின் சண்டைப் பயிற்சியில் நகைச்சுவை பின்ணணியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டது.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைப்பெற்றது.விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது.English summary
Actor Vadivelu and Sadha have performed a dance for the Super hit Hindi song Mere Sapno ke Rani... song in Eli movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil