twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லல்லலல்லலா லல்லலல்லலா..!' - தமிழ் சினிமாவில் வடிவேலு பாடிய பாடல்கள் #VadiveluForLife

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலுவுக்கு இன்று 57-வது பிறந்தநாள்.

    பலரது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களிலும் தனது வசனங்களால் நினைவுகொள்ளப்படும் வடிவேலு, தான் திரையில் தொடர்ச்சியாக நடிக்காத மீம்ஸ் உலகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்.

    பின்னணிப் பாடகருமான வடிவேலு, தான் நடித்த படங்களில் இமிடேட் செய்த பிற நடிகர்களின் பாடல்களை இங்கு பார்க்கலாம். உங்கள் நினைவிலிருக்கும் பாடல்களையும் கமென்ட்டில் பதிவு செய்யலாம்...

    நகரம் வடிவேலு

    ஜோடி' படத்தில் பிரசாந்த் சிம்ரனைப் பார்த்துப் பாடிய சூப்பர்ஹிட் பாடலான 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே... உன் காதலன் நான் தான் என்று' பாடலை இப்போது கேட்டால் பலருக்கும் 'நகரம்' படத்தில் வடிவேலு பாடிய 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே... கண்ணே... உன் காதலன் நான் தான் என்று... என்று...' தான் நினைவுக்கு வரும்.

    காலம் மாறிப் போச்சு

    'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' படத்தில் இடம்பெற்ற 'தண்ணி கருத்திருச்சு... தவள சத்தம் கேட்டிருச்சு... ஊரும் உறங்கிடுச்சு.. பாடலை 'காலம் மாறிப் போச்சு' படத்தில் வடிவேலு பாடியிருப்பார்.

    நகரம்

    நகரம்

    'ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை... அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை' என 'தெய்வத்தாய்' படத்திற்காக வாலி எழுதிய வரிகளைக் கேட்டால் 'நகரம் படத்தில் வடிவேலு 'ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை... அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்... மலரில் குளிரில்லை... லல்லலல்லலா லல்லலல்லலா...' எனப் பாடியது நினைவுக்கு வருமே.

    தமிழ்

    தமிழ்

    'நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா..?' என 'கௌரவம்' படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய பாடலை பிரசாந்த நடித்த 'தமிழ்' படத்தில் வடிவேலு பாடியிருப்பார்.

    தளபதி

    'தளபதி' படத்தில் வரும் 'என் நண்பன் போட்ட சோறு... தினமும் தின்னேன் பாரு... நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்...' பாடலை நம் வைகைப்புயல் வடிவேலுவும் பாடியிருக்கிறார். 'ஊட்டி வளர்த்த என் அன்புத் தங்கச்சி...' பாடலையும் இந்தப் படத்திலேயே பாடியிருக்கிறார் வடிவேலு.

    படிக்காதவன்

    படிக்காதவன்

    'படிக்காதவன்' படத்தில் இடம்பெற்ற 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்... உலகம் புரிஞ்சிக்கிட்டேன்... கண்மணி... என் கண்மணி' பாடலையும் மாடி மீது ஏறி நின்று படியிருக்கிறார் வடிவேலு.

    பாசம்

    'பாசம்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...' பாடலை 'காலம் மாறிப் போச்சு' படத்தில் வடிவேலு பாடுவார்.

    உங்கள் நினைவில் இருக்கும் வடிவேலு பாடிய பாடல்களையும் கீழே கமென்ட்டில் பதிவு செய்யலாம்...

    English summary
    Today is the 57-th birthday of Vadivelu, the illustrious comedian of contemporary cinema. He works as playback singer also, sang songs in his films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X