வடிவேலு அதுக்கெல்லாம் சரிபட்டு வருவாரா…? இனி அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், வடிவேலு இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகைப்புயலுக்கு வந்த சோதனை

வைகைப்புயலுக்கு வந்த சோதனை

தமிழ்த் திரையுலகில் 35 ஆண்டுகளாக காமெடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் வடிவேலு, சில வருடங்களாக ஏராளமான பிரச்சினைகளில் சிக்கித் தவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால், அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு நடித்த படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு ஒரு நாள் கூட நடைபெறாமல் முடங்கியது.

கம்பேக் கொடுத்த கைப்புள்ள

கம்பேக் கொடுத்த கைப்புள்ள

வடிவேலு இயக்குநர் சிம்புதேவன் இடையிலான பிரச்சினையால் இம்சை அரசன் 24ம் புலிகேசி அப்படியே முடங்கியது. இதனால் வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையில் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை நாட,, வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிட்ட வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படங்களில் அதகளம் செய்து வரும் வடிவேலு, மாமன்னன் படத்தில் எமோஷனலான காட்சிகளில் நடித்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளாராம்.

ஜிவி பிரகஷுடன் கூட்டணி

ஜிவி பிரகஷுடன் கூட்டணி

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என பிஸியாக இருக்கும் வடிவேலு, அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் வடிவேலு கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இப்போது ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் பாலா இயக்கவுள்ள இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் குறித்து வெளியான தகவல், ரசிகர்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

கொடூர வில்லனாக வடிவேலு?

கொடூர வில்லனாக வடிவேலு?

அதன்படி, இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு வில்லனாக வடிவேலு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் வடிவேலுவுக்கு ரொம்பவே கொடூரமான வில்லன் கேரக்டர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் கதையை கேட்ட வடிவேலுவுக்கு, அவரின் வில்லன் கேரக்டர் ரொம்பவே பிடித்துவிட்டதாம் அதனால், உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஜிவி பிரகாஷ் - வடிவேலு இணையும் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X