»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
வடிவேலு படத்தில்தான் படு உதார் பேர்வழி. நிஜத்தில், நிறையப் பேரைப் பார்த்து மிரளுகிறார்.

ராஜ்கிரண் புண்ணியத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் வைகைப் புயல் வடிவேலு. மிகச் சிறந்த பெரிய காமெடி நடிகர் தான்.ஆனால், சமீபகாலமாக அவரது நடவடிக்கைகள் கோலிவுட்டை எரிச்சலின் உச்சிக்குக் கொண்டு போயிருக்கின்றன.

கவுண்டமணி கடைசியாக செய்த சில படங்களில் செந்திலுக்குப் பதில் வடிவேலுவை போட்டு மிதித்து வந்தார் கவுண்டர்.

இன்னொரு பக்கம் விவேக் பின்னிக் கொண்டிருக்க.. வடிவேலுவின் திறமையை உணர்ந்து கொண்ட கவுண்டமணி, அவருடன்சேர்ந்து நடிப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். அப்பத்தான், வடிவேலு தனது பாலிட்டிக்ஸை ஆரம்பித்தார்.

கவுண்டமணியின் "அடி"யாளான செந்திலை தன் பக்கம் இழுத்துக் கொண்டு சில படங்களில் காமெடி செய்து பார்த்தார்.ஒரிஜினலைப் போல் வரவில்லை என்றாலும் இவர்களும் சில படங்களில் சேர்ந்து ஜமாய்த்தார்கள்.

அப்புறம் விவேக்கு இணையாக வடிவேலுவும் உச்சத்தை எட்டினார்.

விவேக் ஹீரோ அப்படி, இப்படி என்று ஓரம் கட்டிக் கொள்ள வடிவேலு காட்டில் இப்போது அடைமழை. கிட்டத்தட்டகவுண்டமணி மாதிரியான நிலைக்கு வந்துள்ளார். முக்கால்வாசி படங்களில் வடிவேலுவும் நடித்து வருகிறார்.

இப்படி வளர்ச்சியில் எங்கேயோ போய்விட்ட வடிவேலுவிடம் கவுண்டமணியின் புத்தி ஒட்டிக் கொண்டுள்ளது.

தனக்கு போட்டியாக வரக் கூடும் என்று எதிர்பார்க்கும் சில காமெடி நடிகர்களை அவர் ஒதுக்க ஆரம்பித்துள்ளார். தன்னுடன்சேர்ந்து காமெடி செய்த முத்துக்காளையைப் பார்த்து மிரண்டு போன வடிவேலு, அவரை இப்போது தன் கூட சேர்ப்பதில்லை.இதனால் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வருகிறார் முத்துக்காளை.

அதேபோல, மதுரையைச் சேர்ந்த சுகுமாரையும் பார்த்து பயப்பட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. இந்த சுகுமார் வேறு யாருமல்ல,பார்க்க வடிவேலுவை போலவே இருந்து கொண்டு (கலரும் ஒண்ணுதான்..!) அவரைப் போலவே இமிட்டேட் செய்து வந்தவர்தான்.

காதல் படத்தில் பரத்தின் நண்பராக வந்து கலக்கிய சுகுமாருக்கு, அந்தப் படத்துக்குப் பின் இப்போது கை நிறைய படங்கள்.

ஆரம்பத்தில் அப்படியே வடிவேலு போலவே நடிக்க ஆரம்பித்தால், வடிவேலு தரப்பிலிருந்து சுகுமாருக்கு மிரட்டல் கூடவிடுக்கப்பட்டதாம். தம்பி, ஒன் பாணியிலே நடி, காப்பி அடிக்க ஆரம்பிச்சே, மவனே மதுரைக்கே திரும்பப் போகவேண்டியதுதான் என்று வடிவேலுவின் நண்பர்கள் சிலர் "அன்பாக" கூறியதால், காப்பி அடிப்பதை நிறுத்திக் கொண்டார் சுகுமார்.

இப்போது சுகுமார் காதல் படம் மூலம் பிரபலமடையவே, அடுத்த வடிவேலு என கூறும் அளவுக்கு அவரை சிலர் கொம்பு சீவிஉற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்த சுகுமாரை தனது இங்கிலீஷ்காரன் படத்தில் புக் செய்தார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். சத்யராஜுக்கு நண்பராகவடிவேலுவுக்கும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர்.

அத்தோடு சுகுமாறுக்கும் ஒரு ரோல் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். அப்போது ஸார் வடிவேலுவுக்கும் எனக்கும்ஆகாது, நான் நடிப்பதை அவர் விரும்ப மாட்டார், யோசிச்சுக்குங்க என்று தயக்கம் காட்டியுள்ளார் சுகுமார்.

ஆனால் அவரை சமாதானப்படுத்திய ஷக்தி சிதம்பரம், அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாரு என்று கூறி புக் செய்துள்ளார்.ஆனால் என்ன நடந்ததோ, வடிவேலு என்ன சொன்னாரோ, சுகுமாரைக் கூப்பிட்டு, ஸாரி சுகுமார், நாம அடுத்த படத்துல சேர்ந்துபண்ணுவோம் என்று கூறி சுகுமாரை கேன்சல் செய்து விட்டாராம் இயக்குனர்.

இதுவாவது பரவாயில்லை, வடிவேலுவின் இன்னொரு செயல்தான் செம காமடி.

அதே காதல் படத்தில் கரட்டாண்டி என்ற கேரக்டரில் படு கலக்கலாக அசத்தியிருந்த "சுள்ளானைப்" பார்த்தும் வடிவேலு நடுங்கிப்போயுள்ளாராம். தனது காதல் வளர்த்தேன் படத்தில் இந்த சுள்ளானை புக் செய்துள்ளார் இயக்குனர் கலா புதியவன். இதிலும்வடிவேலு உள்ளார்.

கரட்டாண்டியையும் புக் செய்துள்ளதாக அறிந்த வடிவேலு, கலா புதியவனைக் கூப்பிட்டு முதலில் அந்தப் பையனைத் தூக்கு,இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று மிரட்டியுள்ளார்.

பார்த்தார் இயக்குனர். வடிவேலுவை கட்டி மேய்ப்பதை விட சுள்ளானான கரட்டாண்டியை வைத்து சீப்பாகவே காமெடிபோர்ஷனை முடித்து விடலாம் என்று கருதி, வடிவேலுவுக்கு ஸாரி சொல்லி அனுப்பிவிட்டாராம்.

வடிவேலுவுக்கு நோஸ்-கட் கொடுத்த இயக்குனர் குறித்துத் தான் இப்போது கோடம்பாக்கமெல்லாம் பேச்சு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil