»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமெடி நடிகர்கள் வடிவேலுவுக்கும், செந்தில் போன்ற தோற்றம் கொண்ட ஜெயமணிக்கும் இடையிலான மோதல்தீவிரமடைந்து வருகிறது.

வடிவேலுவைப் பிடிக்காத சில நடிகர்கள் இவர்களின் மோதலை கொம்பு சீவி விட்டுக் கொண்டிருப்பதால் மோதல்இப்போதைக்கு நிற்காது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

காரைக்குடியில் நடந்த ஷூட்டிங்கின்போது போண்டாமணி என்ற காமெடி நடிகரை அடித்து விட்டதாக ஜெயமணிமீது புகார் கிளம்பியது. இது தொடர்பாக அவரிடம் வடிவேலு விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயமணியின் அடியாட்கள் தன்னை அடிக்கவந்ததாக வடிவேலு போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் வடிவேலுதான் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கவந்ததாக ஜெயமணி கூறியுள்ளார்.

இவர்களின் மோதல் இப்போது தீவிரமடைந்து வருகிறது. அதற்கு முன் வடிவேலு, ஜெயமணி நட்பு குறித்துப்பார்ப்போமா? வடிவேலுக்கு சொந்த ஊர் மதுரை. அதே போல ஜெயமணியின் பூர்வீகமும் மதுரைப் பக்கம் உள்ளசிவகங்கை தான்.

சென்னை வந்து நடிக்க ஆரம்பித்தபோது வடிவேலுவும் ஜெயமணியும் ஒரே அறையில்தான் தங்கி நடித்து வந்தனர்.வடிவேலுவுக்கு ராஜ்கிரண் படத்தில் வாய்ப்பு கிடைத்து பெரிய ஆளானார். ஆனால், ஜெயமணிக்கு அந்தஅளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

செந்தில் போன்ற தோற்றம் உள்ளதால் சில படங்களில்அ குட்டி ரோல்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்துவருகிறது. அதிலும்கூட அவர் சோபிக்கவில்லை. இதனால் வடிவேலு தயவால் அவரது படங்களில் தான்ஜெயமணிக்கு சான்ஸ் கிடைத்து வந்தது.

இருவரும் பங்காளி என்றுதான் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வார்களாம். வாடா, போடா என்று கூப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு நட்பு இருந்துள்ளது. இப்போது எல்லாம் போய்விட்டது.

வடிவேலுவைப் பிடிக்காத சில நடிகர்கள் தான் ஜெயமணிக்கு தூபம்போட்டு கொம்புசீவி விடுவதாக வடிவேலுதரப்பினர் கூறுகிறார்கள்.

இதற்கிடையே வடிவேலுவின் பழைய கதைகளை எல்லாம் கிளறி அவரது மானத்தை வாங்கி வருகிறார் ஜெயமணி.என் தாத்த செத்தபோது அலி வேஷம் போட்டு ஆட வந்தவன் தான் இந்த வடிவேலு. சாவு ஆட்டம் போட்டுவிட்டு5 ரூபாய் வாங்கிட்டுப் போனவன் இப்ப காசு வந்ததும் ஆடுறான் என்கிறார்.

ஆனால், வடிவேலுவோ இவருக்கு போன் மூலமும் ஆட்கள் மூலம் டார்ச்சர் மூலம் டார்ச்சர் கொடுத்து வருகிறாராம். விஷயம்மதுரைக்காரரான விஜய்காந்திடம் போயிருக்கிறது. நடிகர் சங்கத் தலைவரான அவர் தான் இதில் ஏதாவது செய்ய வேண்டும்என்கிறார் ஜெயமணி.

காமெடி நடிகர்கள் வில்லன்களாக மாறி வருவது வேதனை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil