»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை :

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார் நடிகைவடிவுக்கரசி.

இயக்குனர் சபா கைலாஷ் தனது கணவர் என்றும் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணைக்கல்யாணம் செய்து கொண்டதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் வடிவுக்கரசி.

இதன் அடிப்படையில் சபா கைலாஷ், அவரது மனைவி, மாமனார் மாரியப்பன் ஆகியோரைபோலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந் நிலையில் தனது கணவர் குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வடிவுக்கரசிபுகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார்கொடுத்துள்ளார்.

அதில், தான் போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால், ஆத்திரமடைந்துள்ள சபா கைலாஷின்குடும்பத்தினர் மூலம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் வடிவுக்கரசி கூறுகையில், இத்தனை காலமாக எனது உழைப்பு, பணம்அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட சபா கைலாஷ் இப்போது பணத்தையும், சொத்தையும்எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

நான் இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன். என் பணம் எனக்குத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான்போலீஸ் உதவியை நாடியுள்ளேன் என்றார்.

  • கணவருக்கு திருமணம்: வடிவுக்கரசி வழக்கு

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil