»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது கணவரை மீட்டுத் தரச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் நடிகை வடிவுக்கரசி. ஆனால்,அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நீண்ட காலமாய் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர் வடிவுக்கரசி. ஆனால், கடந்த சிலஆண்டுகளாக சபாபதி என்ற டைரக்டருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவரும் கணவன்-மனைவியாகவே ஒரேவீட்டில் வசித்து வந்தனர்.

வடிவுக்கரசிக்கு வயது 43. சபாபதி இவரை விட வயதில் மிகவும் இளையவராவார். இருந்தாலும் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். வி.ஐ.பி., புன்னகைப் பூவே உள்ளிட்ட சில படங்களை சபாபதி இயக்கியுள்ளார். பொன்னூஞ்சல் என்றபடத்தை இவர் இயக்கியபோது அதில் உஷா நந்தினி என்ற துணை நடிகை நடித்தார்.

இவரது மகள் சஜனிக்கும் சபாபதிக்கும் கடந்த மார்ச் 27ம் தேதி பதிவுத் திருமணம் நடந்துள்ளது. திருமணவரவேற்பு நிகழ்ச்சி இன்று நடக்கவுள்ளது.

இந் நிலையில் சபாபதியுடன் வாழ்ந்து வந்த வடிவுக்கரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், சபாபதிக்கும் எனக்கும் கடந்த 1998ம் ஆண்டிலேயே திருமணம் நடந்துவிட்டது.நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இந்தத் திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தோம்.

ஆனால், சமீபத்தில் உஷாநந்தினியின் கணவர் மாரியப்பன் எனது கணவருக்கு பணம் தந்து, தனது மகள்சஜனியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். கடந்த 25ம் தேதி சபாபதியை மாரியப்பன்அழைத்துச் சென்றுவிட்டார். அதன் பின்னர் கணவர் வீடு திரும்பவே இல்லை.

இந் நிலையில் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எனது கணவர் சபாபதிக்கும் சஜனிக்கும் திருமணம் நடப்பதாகஅறிந்தேன்.

எனவே, சஜனி, மாரியப்பன், உஷா நந்தினியின் பிடியில் உள்ள எனது கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்கவேண்டும், திருமணத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிர்புர்கர், தினகரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சபாபதியின் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், சபாபதிக்கு கடந்த மார்ச் மாதமே திருமணம்நடந்துவிட்டது. இதனால் இன்று திருமணம் என்று வடிவுக்கரசி இந்த மனுவில் சொல்லியிருப்பது தவறு. இன்றுவரவேற்பு மட்டுமே நடக்கிறது என்றார்.

அவரைத் தடுத்த நீதிபதிகள், நீங்கள் பேசக் கூடாது. நோட்டீஸ் அனுப்பப்பட்டால் மட்டுமே பதில் அளிக்கவேண்டும் என்றனர்.

வடிவுக்கரசியின் வழக்கறிஞர் இளங்கோவன் கூறுகையில், சபாபதியை மாரியப்பன் கடத்தியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். பலனில்லை, இதனால் தான் நீதிமன்றத்தை வடிவுக்கரசி நாடினார் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், கிரிமினல் நடைமுறைச் சட்டப்படி இது குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தான் மனுதாக்கல் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நேரடியாக உயர் நீதிமன்றத்துக்கு வந்தது தவறு. சபாபதிஅடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வடிவுக்கரசி சொல்வது நம்பும்படி இல்லை. இதனால் வழக்கை தள்ளுபடிசெய்கிறோம் என்றனர்.

இதற்கிடையே சபாபதி கடத்தப்பட்டதாக தான் தந்த புகார் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இன்றுவிசாரணைக்கு ஆஜரானார் வடிவுக்கரசி.

வடிவுக்கரசியின் புகார் குறித்து சபாபதியிடம் கேட்டபோது, எனக்கும் வடிவுக்கரசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.அவருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மாதமாகிவிட்டது.

எனது அண்ணனுக்கும் வடிவுக்கரசிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்தது. அண்ணன்இறந்துவிட்டதால், அந்தப் பணத்தைக் கேட்டு என்னை தொல்லை செய்கிறார். மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும்இல்லை என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil