»   »  வை ராஜா வை: ஹிட் ஆ... ப்ளாப்பா? ரசிகர்கள் என்ன சொல்றாங்க?

வை ராஜா வை: ஹிட் ஆ... ப்ளாப்பா? ரசிகர்கள் என்ன சொல்றாங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் இன்று வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், சதீஷ் நடித்துள்ள இப்படித்தில் கொக்கி குமாராக நடித்துள்ளார் தனுஷ். இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியுள்ளார்.

காலையில் படம் பார்த்த கையோடு சுடச்சுட தியேட்டரில் இருந்தவாரே ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள். பாராட்டும் திட்டுமாக கமெண்டுகள் ட்விட்டரின் குவிகின்றன.

வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா

வை ராஜா வை படம் கொடுத்த ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள். நல்லா இருக்கே... விவேக் அருமை. டேனியல் பாலாஜி நடிப்பு சூப்பர். யுவன் பின்னணி இசை சூப்பர் என்று பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

எஸ்.ஜே.சூர்யா குத்து டான்ஸ்

வை ராஜா வை படத்தின் இயக்குநர் பெண் என்பதால்தான் ஒரு ஆணை ஐட்டம் பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகை.

ஐயோ பாவம்…

ரஜினி வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டு நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் பொண்ணு இப்படி காசை கரியாக்குது.அய்யோ பாவம் # வை ராஜா வை ஃபிளாப்

வேற வழி இல்லையோ

உத்தம வில்லன் ரிலீஸ் ஆகலை... எனவே வேற வழியே இல்லாம எல்லாரும் வை ராஜா வை போறாங்க என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

செம ப்ளாப்பாமே

இது வரை வந்த தகவல்கள் வைத்து... வை ராஜா வை... கெளதம் கார்த்திக்கோட ஹாட் ரிக்காம் #பிளாப்

தூக்கத்துல கூட போயிறாதீங்க

வை ராஜா வை கொடூர மொக்கையாம். தூக்கத்துல நடந்து கூட அந்தப் பக்கம் போயிறாதீங்கன்னு அறிவுரைகள் வருது. இது ஒரு ரசிகரின் ட்விட்டர் கருத்து.

English summary
After making fantastic debut with "3". Aishwarya Dhanush is back with "Vai Raja Vai". Like her debut movie, this latest film too belongs to romantic genre."Vai Raja Vai" has generated a lot of positive talks and the success of the audio has helped the movie in generating curiosity in the minds of the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil