»   »  யுவனின் இனிக்கும் இசை… ஐஸ்வர்யாவின் அசத்தல் இயக்கம் – ரசிகர்கள் பார்வையில் “வை ராஜா வை”!

யுவனின் இனிக்கும் இசை… ஐஸ்வர்யாவின் அசத்தல் இயக்கம் – ரசிகர்கள் பார்வையில் “வை ராஜா வை”!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே தினமான இன்று கமலின் உத்தம வில்லனுடன் போட்டியாக சினிமா ரேஸில் வெளியாகியுள்ள வை ராஜா வை திரைப்படத்தினை குறித்து ரசிகர்கள் தங்களது பார்வையை இணையத்தில் பதிவிட்டு வருகின்றன.

கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் "வை ராஜா வை".

இப்படத்தில் டாப்ஸி, விவேக், டேனியல் பாலாஜி, வசந்த், காயத்ரி ரகுராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நட்சத்திரப் பட்டாளம்:

நட்சத்திரப் பட்டாளம்:

ஸ்ரீரஞ்சனி , மனோ பாலா, போஸ் வெங்கட், எம்.எஸ். பாஸ்கர், சிறப்புத் தோற்றத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா என்று ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா.

உத்தம வில்லனுடன் மோதல்:

உத்தம வில்லனுடன் மோதல்:

இதன் சிறப்பான பாடல்களால் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பிய இப்படம், கமல்ஹாசனின் உத்தம வில்லனுடன் களத்தில் இறங்கியுள்ளது. இப்படம் குறித்த கருத்துக்களை நெட்டில் பதிவிட்டுள்ளனர் இணையதள சினிமா ரசிகர்கள்.

போரடிக்காத பர்ஸ்ட் பார்ட்:

போரடிக்காத பர்ஸ்ட் பார்ட்:

ஒரு நிமிடம் கூட போரடிக்கவில்லை வை ராஜா வை என்று டுவிட்டியுள்ளார் ஒரு ரசிகர். முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி கொஞ்சம் பாஸ்ட் என்று தெரிவித்திருக்கின்றார். தனுஷின் எண்ட்ரி அருமையாம்.

”மீண்டு”ம் வந்துள்ள யுவனின் இசை:

”மீண்டு”ம் வந்துள்ள யுவனின் இசை:

அருமையான கதைக்களம், சிரிக்க வைக்கும் காமெடி, ஐஸ்வர்யா தனுஷ் சிறப்பான இடத்தினை நோக்கிப் பயணிக்கின்றார். ஹே யுவன் ஈஸ் பேக் என்று மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார் மற்றொரு ரசிகர்.

ஆண் நடிகரின் ஐயிட்டம் டான்ஸ்:

ஆண் நடிகரின் ஐயிட்டம் டான்ஸ்:

ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் படமொன்று வந்தாலே நடிகையின் ஐயிட்டம் டான்ஸிற்கு பதில் நடிகருடையது இருக்கும் என்றுள்ளார் மற்றொரு ரசிகர்.

குழுவிற்கே வாழ்த்துக்கள்:

குழுவிற்கே வாழ்த்துக்கள்:

அப்பாவைப் போலவே கடின உழைப்பு ஐஸ்வர்யா... வை ராஜா வை அருமை... குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் ஒரு ரசிகர்.

வெயிட் அண்ட் சீ:

வெயிட் அண்ட் சீ:

மொத்தத்தில் பாசிட்டிவான கமெண்ட்டுகள் வந்தாலும் உத்தம வில்லனுக்கு போட்டியாக வந்துள்ள வை ராஜா வையின் கலெக்‌ஷனும், ரசிகர்களின் கருத்துக்களும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

English summary
After making fantastic debut with "3". Aishwarya Dhanush is back with "Vai Raja Vai". Like her debut movie, this latest film too belongs to romantic genre.
Please Wait while comments are loading...