»   »  வைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே

வைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் விநியோக உரிமை மற்றும் விநியோக முறைகளில் ஒரு பெரிய புரட்சியை, தனது வைகை எக்ஸ்பிரஸ் படம் ஏற்படுத்தும் என்று நடிகர் ஆர் கே தெரிவித்திருக்கிறார்.

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் ஆர்கே, நடிகைகள் இனியா, நீது சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வைகை எக்ஸ்பிரஸ்

வைகை எக்ஸ்பிரஸ்

நடிகர் ஆர்கே, இனியா, நீது சந்திரா, ஆர்கே செல்வமணி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ். மலையாளத்தில் வெளிவந்த நடிய கொள்ளபெட்டா ரத்ரி படமே தமிழில் வைகை எக்ஸ்பிரஸ் ஆக உருமாறி இருக்கிறது.இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்.கே பேசும்போது தனது வைகை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் சினிமா விநியோகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

பைரவா

பைரவா

இந்த சந்திப்பில் தனது அடுத்த பட அறிவிப்பையும் ஆர்கே வெளியிட்டார்.அவரது அடுத்த படத்தின் பெயர் "பைரவா" என்றும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்றும் அத்துடன் இதுவரை நடிகர் ஆர்.கே மலையாள இயக்குனரான ஷாஜி கைலாஷ் அவர்களுடன் மட்டுமே பணியாற்றுகிறார் என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் திரைப்படம் அமையும். இப்படம் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையிலான கதையம்சத்தை கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.

வைகை எக்ஸ்பிரஸ் விநியோகஸ்தர்கள்

வைகை எக்ஸ்பிரஸ் விநியோகஸ்தர்கள்

வைகை எக்ஸ்பிரஸ் தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை என்கிறோம். இது என்ன நியாயம்?ஏர்செல், ஏர்டெல் என செல்போனுக்கு எல்லா நெட் ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்கு கடை விற்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஏன் சினிமாவுக்கு இருக்ககூடாது?பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்த புதிய திட்டம்.

தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும்

என்னுடைய வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.
அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இது தமிழ் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

காலத்தின் மாற்றம்

காலத்தின் மாற்றம்

ஒரு திருட்டு விசிடி விற்கிறவன் அவனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரத்துடன் வீட்டிலேயே சிடியைக் கொடுத்து விட்டு, இது தரமாக இருந்தால் மட்டும் பணம் தருமாறு கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது நாம் ஏன் இதை செய்துகாட்ட முடியாது?
இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல் நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.

சினிமா பைத்தியம்

என்னுடைய இந்தத் திட்டத்திற்காக சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன். இதுவரை பெரிய நடிகர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் தன் படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்க வழிவகை செய்ததில்லை. வீட்டில் அவனுக்கு வெட்டிப்பயல் சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பனையின் மூலம் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன் என்று நடிகர் ஆர்.கே. கூறினார்.

English summary
R.K Speech at Vaigai Express Movie Press Meet. R.K, Iniya, Neetu Chandra Starrer Vaigai Express will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil