»   »  வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்
Rating: 3.0/5.0

நடிகர்கள்: ஆர்கே, நீத்து சந்திரா, சுமன், நாசர், இனியா


ஒளிப்பதிவு: சஞ்சீவ் சங்கர்


இசை: தமன்


தயாரிப்பு: மக்கள் பாசறை


இயக்கம்: ஷாஜி கைலாஷ்


சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் ஒரு டிவி பெண் நிருபர், எம்பி சுமனின் உறவுக்காரப் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா (இரட்டை வேடம்) ஆகிய மூன்று பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்.


இந்தக் கொலைகளை விசாரிக்க ரயில்வே சிறப்பு போலீஸ் அதிகாரியான ஆர்கே நியமிக்கப்படுகிறார். அவர் அதே பெட்டியில் பயணிக்கும் தீவிரவாதி ஆர்கே செல்வமணியை முதலில் சந்தேகப்படுகிறார். ஆனால் அவர் செய்யவில்லை என்பது தெரிந்ததும், அவரது விசாரணை வளையத்துக்குள் வெவ்வேறு நபர்கள். குற்றவாளியை எப்படிக் கைது செய்கிறார் என்பதை விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் ஆக்கியிருக்கிறார்கள்.


vaigai-express-review

பலியான பெண்களின் பின்னணி, கொலைக்கான நோக்கம், யார் கொலையாளி என்பதை போன்ற கேள்விகளுக்கு மிகத் தெளிவாக, அதே நேரம் அழுத்தமான காட்சிகள் மூலம் பதில் தந்திருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்.


தனக்கு எந்த வேடம் பொருந்தும் என்பதை உணர்ந்து, அந்த வேடத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு, கலக்கியிருக்கிறார் நாயகன் ஆர்கே. கொலையின் பின்னுள்ள மர்ம முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதமும், குற்றவாளிகளை நெருங்கும் நேர்த்தியும் நம்மை இருக்கை நுனிக்கே நம்மை நகர்த்திவிடுகின்றன. சண்டைக் காட்சிகளில், குறிப்பாக அந்த க்ளைமாக்சுக்கு முந்தைய சண்டைக் காட்சி செம்ம.


இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா. சில க்ளோசப் காட்சிகளில் மேக்கப் உறுத்துகிறது. ஆனால் இரண்டு வேடங்களையும் பிரமாத வேறுபடுத்திக் காட்டுகிறார்.


நாசர், சுமன், இனியா, எம்எஸ் பாஸ்கர், சுஜா, ஜான் விஜய், மனோபாலா, ஆர்கே செல்வமணி என படத்தில் நிறைய துணைப் பாத்திரங்கள். ஆனால் ஆச்சர்யம் பாருங்கள்... அத்தனைப் பேரின் பாத்திரப் படைப்பும் மனதில் நிற்கிறது. எல்லோருக்குமே சம முக்கிய பங்கு தந்திருக்கிறார் இயக்குநர்.


படத்தின் பெரிய ப்ளஸ் ஷாஜி கைலாஷின் திரைக்கதை. தடதடவென ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கிறது. பிரபாகரின் வசனங்கள் நச். இரண்டே கால் மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு மிகவும் நேர்த்தியான எடிட்டிங்.


இசை மட்டும்தான் சில இடங்களில் காதைப் பதம் பார்க்கிறது. படத்தின் விறுவிறுப்புக்கு பங்கமில்லாத ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கருடையது.


தேவையற்ற பில்டப் காட்சிகள், அறுவை நகைச்சுவை, குத்தாட்டம் என எதுவும் இல்லாமல், வெகு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ரயில் த்ரில்லர் இந்த வைகை எக்ஸ்பிரஸ்!

English summary
RK,s recent release Vaigai Express is a perfect train thriller, directed by Shahji Kailash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil