»   »  வெள்ளித்திரையை ஆளும் இராஜபாளையத்து இளைஞன் - வைகோ பாராட்டு மடல்!

வெள்ளித்திரையை ஆளும் இராஜபாளையத்து இளைஞன் - வைகோ பாராட்டு மடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தைப் பாராட்டி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஒரு மடல் வெளியிட்டுள்ளார்.

சிறுவயதில் இருந்து தான் பார்த்த திரைப்படங்களின் நினைவுகளையும், அவற்றில் மனங்கவர்ந்த திரைப்படங்களையும் நினைவுகூர்ந்தவர் தான் ஒரு சினிமா ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த 'தர்மதுரை' திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அந்த மடலில் தெரிவித்துள்ளார்.

 சீனு ராமசாமி படங்கள் :

சீனு ராமசாமி படங்கள் :

இயக்குநர் சீனு ராமசாமியின் 'தென்மேற்குப் பருவக்காற்று' கள்ளிக்காட்டுச் சீமையின் வாழ்க்கையை, ஒரு தாயின் உழைப்பை நேர்த்தியாகப் பேசிய படைப்பு. இந்தப் படத்தில் வரும் கிராமிய வாழ்க்கையைப் பார்த்து எனக்கு என் இளமை நாட்கள் நினைவுக்கு வந்தன. கடற்கரை ஓர மீனவர் வாழ்க்கையை 'படகோட்டி'யிலும், 'கடலோரக் கவிதைகளிலும்' நான் கண்டிருந்தாலும் 'நீர்ப்பறவை' ஆஸ்கர் விருது பெறவேண்டிய படம்.

 ஐந்து காட்சிகளில் அழுதேன் :

ஐந்து காட்சிகளில் அழுதேன் :

'நீர்ப்பறவை' உயிர்க்காவியத்தைப் பார்த்தபோது ஐந்து இடங்களில் கண்கலங்கி அழுதேன். மொழி அறியாதவர்கள் கூட இப்படத்தைக் கண்டால், பிறநாட்டினர் பார்த்தால் இது அவர்களது நெஞ்சத்தை உலுக்கும். தென்கொரிய மக்கள் இக்காவியத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கினார்களாம். இந்தக் காவியத்தைத் தந்தவன் தமிழன் என்பதாலேயே தேசிய விருது கிடைக்கவில்லை போலும்.

என்னை உலுக்கியது :

பாசமலரைப் போல், ஞான ஒளியைப் போல், நெஞ்சில் ஓர் ஆலயத்தைப் போல் தொடங்கிய நிமிடத்திலிருந்து முடியும் வரை முழுமையாக என்னை உலுக்கிய படம் 'தர்மதுரை' எனும் ஒளி ஓவியம் ஆகும். நடிகர் திலகத்துக்குப் பின்னர் திரைப்படத்தைப் பார்க்கும்போதே கதாபாத்திரம் இருதயத்திற்குள் ஊடுருவி அசைத்த நடிகர் என்றால் விஜய் சேதுபதி தான்.

 விருதுக்குத்தான் பெருமை :

விருதுக்குத்தான் பெருமை :

இந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும். சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அது அந்த விருதுக்குத்தான் பெருமை!

 வெள்ளித்திரையை ஆளும் இளைஞன் :

வெள்ளித்திரையை ஆளும் இளைஞன் :

'இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம். இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையை ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரர் விஜய் சேதுபதி ஆவார். இவரது பன்முகத்திறமை பல வெற்றிகளைக் குவிக்கும். என அந்த மடலில் வெகுவாகப் பாரட்டியிருக்கிறார்.

 ஸ்டாலினுக்குப் பிறகு :

ஸ்டாலினுக்குப் பிறகு :

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'தர்மதுரை' படம் பார்த்துவிட்டு தி.மு.க பொதுச் செயலாளர் ஸ்டாலின் பாராட்டு மடல் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Vaiko wrote a letter about dharmadhurai movie. He shared memories and criticises seenu ramasamy films in this letter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil