»   »  சினிமா தயாரிப்பில் இறங்கினார் வைகோ... பிரமாண்டமாய் உருவாகும் வேலு நாச்சியார்!

சினிமா தயாரிப்பில் இறங்கினார் வைகோ... பிரமாண்டமாய் உருவாகும் வேலு நாச்சியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமா தயாரிப்பில் இறங்கினார் வைகோ-வீடியோ

சென்னை: முதல் முதலாக சினிமா படம் தயாரிக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அவர் முதல் முதலாகத் தயாரிக்கும் படம் வேலு நாச்சியார்.

வேலு நாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வேலு நாச்சியார் மேடை நாடகத்தையே மிக பிரம்மாண்டமாக வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். இதற்காக கண்ணகி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

Vaiko's first film production Velu Nachiyar

"திரைப்படங்கள் மீது எனக்கு மிகப் பெரிய காதல் உண்டு. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொண்டதில்லை. வேலு நாச்சியார் நான் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலு நாச்சியார் கதையைத் திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும்," என்றார் வைகோ.

Vaiko's first film production Velu Nachiyar

பட ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்த விஷால் பேசுகையில், "வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்," என்றார்.

English summary
MDMK Chief Vaiko is producing a movie titled Velu Nachiyar for the first time

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil