»   »  2 கன்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

2 கன்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் இருந்தார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு கடந்த ஜனவரி மாதம் கண் பார்வை கிடைத்தது.

இதற்கிடையே அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் திருமணம் நிச்சயமானது.

திருமணம்

திருமணம்

விஜயலட்சுமி, சந்தோஷின் திருமணம் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் விஜயலட்சுமி தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாட்டு

பாட்டு

திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி படங்களில் பாடக் கூடாது என்றும், இசை ஆசிரியையாக பணியாற்ற வேண்டு என்றும் சந்தோஷ் நிபந்தனை விதித்தாராம்.

சந்தோஷ்

சந்தோஷ்

திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமியின் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்த சந்தோஷ் தற்போது முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் திருமணத்தை நிறுத்தியதாக விஜயலட்சுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

எதிர்காலம்

எதிர்காலம்

என் மகள் விஜயலட்சுமியின் எதிர்காலத்தை மனதில் வைத்து தான் அவரது திருமணத்தை நிறுத்தியுள்ளோம். அவருக்கு என்று லட்சியம் உள்ளது என்று விஜயலட்சுமியின் தந்தை கூறியுள்ளார்.

English summary
Singer Vaikom Vijayalakshmi has called off her wedding after her fiancee Santhosh put forth two conditions suddenly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil