»   »  கமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி

கமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இணைத்த உன்னத மனிதர் பஞ்சு அருணாச்சலம் என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தி.நகரில் உள்ள வீட்டில் மறைந்தார்.

Vairamuthu hails Panchu Arunachalam

அவருக்கு வயது 75. அமெரிக்காவிலிருந்து அவரது மூத்த மகன் மற்றும் இளைய மகள் வர வேண்டியிருந்ததால் பஞ்சு அருணாசலத்தின் உடல் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் திரையுலகில் பாடலாசிரியரகவும், கதாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பன்முகத் திறன் கொண்ட ஜாம்பவானாக திகழந்தவர்.

இன்று காலை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி மரியாதை செலுத்த வந்த கவிஞர் வைரமுத்து, 'கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருபெரும் நடிகர்களை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம் அய்யா. அவரது இழப்பு திரையுலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் சுப்புவிற்கு ஆறுதல் கூறினார்.

English summary
Poet Vairamuthu has hailed late Panchu Arunachalam on his death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil