»   »  இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்! - கவிஞர் வைரமுத்து

இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்! - கவிஞர் வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டுக்காகப் போராடி வென்ற இந்த மாணவர்களை நான் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன் என்கிறார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்துவின் சிறுகதைகள் என்ற நூலின் மலையாளப் பதிப்பு இன்று வெளியானது. அதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைரமுத்து பேசுகையில், "மாணவர்கள் நடத்திய இந்த போராட்டம் வெற்றியா ? தோல்வியா ? என்பதை நினைத்து பார்ப்பதை விட இப்படி ஒரு நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே என்ற வலிதான் எனக்கு உள்ளது.

Vairamuthu hails students community

ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை, இது ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழர்களின் பண்பாடு. நம் தமிழ் பெண்கள் பாய்ந்து வரும் காளையின் கொம்புக்கு அஞ்சி ஒதுங்குபவனை இந்த பிறவி மட்டும் அல்லாமல் அடுத்த பிறவியிலும் மணம் புரிய மாட்டாள்.

பழங்காலத்தில் தமிழ் பெண்களின் தாலி புலி நகத்தால் செய்யப்பட்டது... புலியை கொன்று எவன் நகம் கொண்டு வருகிறானோ அந்த நகத்தினை தாலியாக முடிந்து கொண்டாள் தமிழச்சி என்பது பழைய மரபு. இது எதற்காக என்றால் புலியை வென்றவன்தான் பகையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றுவான் என தமிழச்சி நம்பினாள்.

அந்த உடல் உரம் தமிழனுக்கும் இருந்தது, அவ்வாறு இருக்க வேண்டும் என சமூகமும் நம்பியது. ஏன் என்றால் உடல் வலிமையில் சமூகம் வாழ்ந்த காலம் அது...

காலப் போக்கில் புலி மாறி காளையை அடக்கினால் தான் பெண் கொடுக்கப்படும் என்ற சூழ்நிலை வந்தது. ஆனால் இப்போது பெண்கள் ஒரு ஐம்பது ஆயிரம் சம்பாதிக்கிறாரா? சொந்தமாக கார் வச்சுருக்காரா? அமெரிக்காவில் எந்த ஸ்டேட்ல இருக்காரு? தன்னை பொருளாதார ரீதியில் காப்பாற்றுவாரா ? என புற பாதுகாப்பு வந்தது.

ஏன் பெண்ணுக்கே பாதுகாப்பு வந்துவிட்டது ! இப்படி சூழ்நிலை ஒருபுறம் போக, இப்போது என் காலத்திலேயே மாடுகள் அழிந்து விட்டது. நாங்கள் இப்போது 'பைப் பால் வாங்கி கைப் பால் குடித்து கொண்டிருக்கிறோம்'.

நான் பார்த்து நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் இவ்வளவு மாற்றம் என்றால்... எதிர் காலத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கு நாம் போராட வேண்டாமா ? எனவே இந்த போராட்டத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டது நிச்சயம் எனக்கு வலியே.

மேலும் இந்த வெற்றியில் மாணவ செல்வங்களை தவிர வேறுயாரும் உரிமை கொண்டாடுவதற்கு, அவ்வளவு உரிமை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தமிழக அரசு போராடி அவசர சட்டம் கொண்டு வந்ததை நான் பாராட்டுகிறேன். அதை கொண்டுவர செய்த இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்," என்று கூறினார்.

English summary
Poet Vairamuthu has hailed the student community for their achievement in Jallikkattu protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil