»   »  சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...! - வைரமுத்து

சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...! - வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவாஜி கணேசனின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி கணேசன் சிலையை கருணாநிதிதான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதை தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிவாஜி கணேசன் பீடத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும்.

Vairamuthu questions on hiding Karunanidhi name in Sivaji statue

ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்? சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்தான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். கன்னியாகுமரியில் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயன பூச்சு பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும். சிலையை சிலையாக பார்க்கவேண்டும்; அரசியலாக பார்க்கக்கூடாது.

Vairamuthu questions on hiding Karunanidhi name in Sivaji statue

சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி நிறுவியபோது அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன். சிலை மறுநிலை நாட்டம் செய்யப்பட்டாலும் அந்த சிலையோடு கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கவேண்டும்.

ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கருணாநிதியின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கருணாநிதியின் திருப்பெயரை தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெற செய்யவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாக தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Vairamuthu has questioned the govt that why they hiding Karunanidhi name in Sivaji Ganesan statue

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil