twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவன் பற்றி இளையராஜா கணித்தது அப்படியே பலித்தது! - வைரமுத்து

    By Shankar
    |

    யுவன் சங்கர் ராஜா குறித்து முன்பு ஒருமுறை இளையராஜா கணித்துச் சொன்னது அப்படியே பலித்தது, என்று கூறியுள்ளார் வைரமுத்து.

    இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து.

    இளையராஜாவால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வைரமுத்து. காலத்தை வென்ற பல காவியப் பாடல்களைப் படைத்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

    28 ஆண்டுகளுக்குப் பிறகு...

    28 ஆண்டுகளுக்குப் பிறகு...

    இளையராஜாவுடன் இணையாவிட்டாலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா குடும்பத்துடன் இணக்கமாகியிருக்கிறார் வைரமுத்து. இந்த இணக்கம் விரைவில் அவரை இளையராஜாவுக்கும் பாடல் எழுத வைக்கும் என இசை ரசிகர்கள் நம்புகின்றனர்.

    ப்ளாஷ்பேக்

    ப்ளாஷ்பேக்

    இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா பற்றி ஒரு ப்ளாஷ்பேக் நிகழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

    அவர் கூறியிருப்பதாவது:

    அப்போது இளையராஜா உஸ்மான் ரோடு வீட்டில் குடியிருந்தார். அந்த வீடு 'சிவகங்கைச் சீமை' காலத்தில், கண்ணதாசன் அலுவலகம். அவரை முதலில் நான் சந்தித்த வீடும் அதுதான்.

    20 வயதிலேயே சாதிப்பான்

    20 வயதிலேயே சாதிப்பான்

    அந்த வீட்டில் இந்தப் பையன் (யுவன்) தவழ்ந்து விளையாடியபோது ஒருமுறை இளையராஜா சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. 'நான் 40 வயதில் அடைந்த புகழை, இந்தப் பையன் 20 வயதில் எட்டுவான்' என்றார்.

    'பொன்குஞ்சாக நினைத்துப் பேசுகிறார்' என நினைத்தேன். ஆனால், அவரது கணிப்பு பின்னர் பலித்ததில், எனக்கு ஆச்சரியம்!," என்று கூறியுள்ளார் வைரமுத்து.

    சகோதரி ஜீவா

    சகோதரி ஜீவா

    மேலும் இளையராஜாவின் மனைவி மறைந்த ஜீவா குறித்தும் வைரமுத்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    ஜீவா குறித்து கூறுகையில், "ராஜா குடும்பத்தில் என் மீது அதீத அன்பு காட்டியவர் அவரது துணைவியார், என் பாசத்துக்குரிய சகோதரி ஜீவா. அந்தச் சகோதரி கையால் பலமுறை உணவு அருந்தியவன் நான்.

    பார்த்து மகிழ இல்லையே

    பார்த்து மகிழ இல்லையே

    அவர் என்னிடம் ஒருமுறை கேட்டார், 'அவரோடதானே உங்களுக்கு முரண்பாடு. என் மகனுக்குப் பாட்டு எழுத என்ன தயக்கம்?' என்று. அப்போது, 'இருக்கட்டும்மா... ஒரு காலம் வரும்' என்றேன். ஆனால், அந்தக் காலம் வரும்போது அதைப் பார்த்து மகிழ, சகோதரி இல்லாமல் போய்விட்டார்," என்று நெகிழ்ந்துள்ளார் கவிப்பேரரசு.

    English summary
    Vairamuthu shared his memories of Ilayaraaja friendship.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X