twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தவள்.. வைரமுத்துவின் அன்னம்மா பெத்தவளே பாடல் ரிலீஸ்!

    |

    சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2ன் 4வது பாடலான "அன்னம்மா பெத்தவளே" பாடல் வெளியாகி உள்ளது.

    "மூத்த குடியாள் மகள் ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தது கண்டு அழுது பாடுகிறாள் இளைய குடியாள். ஒரு மகிழ்ச்சி இங்கே துக்கமாகிறது." என இந்த பாடல் குறித்த விளக்கத்தை கூறியுள்ளார் வைரமுத்து.

    பாடலாசிரியர் வைரமுத்துவின் தயாரிப்பில் உருவாகி வரும் நாட்படு தேறல் 100 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் மற்றும் 100 இயக்குநர்கள் என வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்களாக இந்த நாட்படு தேறல் உருவாகி வருகிறது.

    Vairamuthu’s Annamma Pethavale song released

    ஏழை வீட்டுப் பெண் வயதுக்கு வருவது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை தராமல் மாறாக என்ன என்ன கண்ணீர் கதைகளை கொடுக்கின்றன என்பன குறித்து இந்த பாடலில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

    Vairamuthu’s Annamma Pethavale song released

    வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள இந்த அன்னம்மா பெத்தவளே பாடலுக்கு அய்ஸ் நவ்ஃபாய் ராஜா என்பவர் இசையமைத்துள்ளார். இயக்குநர் கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த பாடலுக்கு வைக்கம் விஜயலட்சுமி தனது காந்தக் குரலை கொடுத்து பாடலுக்கு மேலும், அழகு சேர்த்துள்ளார்.

    குழந்தை நட்சத்திரமான அபிநய ஸ்ரீ இந்த பாடலில் நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் எடிட் செய்துள்ளார்.

    மே 8ம் தேதியான இன்று இசையருவி தொலைக்காட்சியில் நண்பகல் 1.30 மணிக்கு இந்த பாடல் ஒளிபரப்பானது. கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பானது. மேலும், வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.

    English summary
    Vairamuthu’s Naatpadu Theral season 2 and its 4th song Annamma Pethavale song released now in Kalaignar Tv, Isai Aruvi and his own Youtube Channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X