Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாதாதி கேசம் கடவுளுக்கு.. கேசாதி பாதம் கன்னிகைக்கு.. வைரமுத்துவின் ‘கொண்டல் மேகம்’ பாடல் வெளியானது
சென்னை: வைரமுத்துவின் நாட்படு தேறல் 2ம் பாகத்தின் 3வது பாடல் வெளியாகி உள்ளது.
கொண்டல் மேகம் என கொஞ்சும் தமிழில் உருவாகி உள்ள இந்த பாடலை சங்கர் மகாதேவன் பாடி உள்ளார். வைரமுத்து தயாரிப்பில் 100 பாடல்கள் 100 இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கொண்டு இந்த நாட்படு தேறல் உருவாக உள்ளது.
சைமன் கிங் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகவ் விஜய் மற்றும் தீப்ஷிகா நடித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடும் அஜித்... விஜய்யுடன் வீடியோ வெளியிட்ட ரசிகர்கள்... செம்ம!

நாடுபடு தேறல் 2
பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பு ஆல்பம் பாடல்களாக மாறி வருகின்றன. அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சீசன் பாடலில் நடித்திருந்தனர். இந்நிலையில், வைரமுத்து தயாரிப்பில் நாட்படு தேறல் 2ம் பாகம் பாடல்கள் உருவாகி வெளியாகி வருகின்றன.

கொண்டல் மேகம்
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட அக்ஷரா ரெட்டி. நாட்படு தேறல் 2ன் முதல் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இரண்டாம் பாடலாக ஆயிரம் தான் கவி சொன்னேன் என்கிற பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். அவர் மறைந்தாலும், அவர் குரல் மறையாது என்பதற்கு அந்த பாடலே சான்றாக அமைந்தது. இந்நிலையில், நாட்படு தேறல் 2ம் பாகத்தின் 3ம் பாடலான கொண்டல் மேகம் பாடல் வெளியாகி உள்ளது.

கேசாதி பாதம்
"ஒரு கவிதை பாதத்தில் தொடங்கி கேசத்தில் முடிந்தால் அது பாதாதி கேசம்; அது கடவுளுக்கு. கேசத்தில் தொடங்கிப் பாதத்தில் முடிந்தால் அது கேசாதி பாதம்; அது கன்னிகைக்கு. இதோ தன் காதலிக்கு ஒரு கேசாதிபாதம் பாடுகிறான் ஒரு காதலன்." என பாடலுக்கான அர்த்தத்தையும் விளக்கி உள்ளார் வைரமுத்து.
பாடல் வரிகள்
பாதாதி கேசம் கடவுளுக்கு
கேசாதி பாதம் கன்னிகைக்கு
கேசாதி பாதத்தில் வர்ணிக்கிறேன் - என்
கிளியாளைத் தமிழ்கொண்டு பூசிக்கிறேன்
*
கொண்டல் மேகமொன்று
கொண்டை ஏறிநின்று
கொண்டுலாவும் குழலாள் - பிறை
கொண்டு வார்த்த நுதலாள் - வெள்ளிக்
கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவிவந்து
சண்டை போடும் விழியாள் - என்
ரெண்டு கண்ணில் அழியாள்
*
எள்ளின் பூவிலொன்று
துள்ளி நீண்டதென்று
சொல்லும் நாசியுடையாள் - நம்மை
வெல்லும் ராசியுடையாள் - மெல்லக்
கொள்ளை கொள்ளை கொண்டு
அள்ளித் தின்னுமென்னும்
பிள்ளை பிள்ளை இதழாள் - அதில்
கள்ளைக் கொஞ்சம் கசிவாள்
சங்கும் பொன்விளைந்த
நுங்கும் வந்துவந்து
பங்கு கேட்கும் கழுத்தாள் - அதில்
பொங்கும் மஞ்சள் குழைத்தாள் - அவை
தங்கள் பாகமென்று
தங்கப் பாளம்ரெண்டு
தங்கும் தோள்கள் படைத்தாள் - என்னைத்
தங்கிப் போக அழைத்தாள்
*
ஒன்றுபோல் வளர்ந்த
ரெண்டு தேர்க்குடங்கள்
நின்றுநீளும் தனத்தாள் - கர்வம்
கொன்றுபோகும் குணத்தாள் - முடி
கொண்ட ஆலிலைபோல்
மின்னும் மேல்வயிற்றில்
வண்ணம் மேலும் வளர்த்தாள் - தங்கக்
கிண்ணம் மூடி முடித்தாள்
முல்லைப் பூங்கொடிக்குப்
பிள்ளைபோல் பிறந்தே
இல்லை என்னும் இடையாள் - அதில்
தொல்லை செய்யும் உடையாள் - நல்ல
வெள்ளைத் தந்தம் ரெண்டு
வெள்ளிப் பூண்பிடித்துச்
சொல்லிச் செய்த தொடையாள் - செவ்
வல்லிப் பூவின் அடியாள்
என கொஞ்சும் தமிழில் இந்த பாடல் அமைந்துள்ளது. அதன் வீடியோவும் அழகாக இயக்கப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு வெளியாகி உள்ளது.