»   »  கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ

கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெட்லி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய வைரமுத்து சினிமா நண்பர்கள் என் மேல் பாசமாக இருப்பதற்குக் காரணம் நான் சினிமாவுக்குள் இல்லை; சினிமாவில் இருக்கிறேன் என்பதுதான் என கூறினார்.

ஜெட்லி திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தாணு, வைரமுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சத்யா உள்பட பலர் கலந்துகொண்டர்.

 Vairamuthu told secret to maitain relationship in jetlee audio launch

இந்தப் படத்தை ஜெகன் சாய் என்பவர் இயக்கியிருக்கிறார். ஶ்ரீசிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் இயக்குநர் சாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சத்யா இசையமைக்க , கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

இசைவெளியீட்டு நிகச்சியில் பேசிய வைரமுத்து,''சினிமாவில் இருக்கும் அனைத்து நண்பர்களும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். காரணம் நான் சினிமாவில் இருக்கிறேனே ஒழிய சினிமாவுக்குள் இல்லை. சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன். விலகி இருக்கும்போதுதான் நேசமும் மரியாதையும் குறையாமல் இருக்கும்'' என்று கூறினார்.

English summary
I am in tamil film industry, not into the industry. That is why people love me said Vairamuthu in jetlee audio launch function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil