கமல், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் பால்கே விருது...கோரிக்கை வைத்த வைரமுத்து

சென்னை : இளையராஜாவும், வைரமுத்துவும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இருவரும் ஒன்றாக சினிமாவிற்கு வந்தவர்கள். இவர்கள் இருவரின் காம்போ ஆட்சி செய்த காலம், தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே வர்ணிக்கப்பட்டது. இவர்களின் காம்போவில் உருவான பாடல்கள் பலவும் மறக்க முடியாததாக இருந்தது.

நெருங்கிய நண்பர்களான இவர்கள், பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்திற்கு பிறகு இணைந்து பணியாற்றவே இல்லை. மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.

வைரமுத்து பற்றி பேசாத இளையராஜா

வைரமுத்து பற்றி பேசாத இளையராஜா

நெருங்கிய நண்பர்களான இவர்கள் இத்தனை ஆண்டுகளில் மீண்டும் ஒரு படத்தில் கூட ஏன் இணைந்து பணியாற்றிவில்லை என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாக, மர்மமாகவே உள்ளது. இது பற்றி இளையராஜாவிடம் பல பேட்டிகளில் கேட்கப்பட்டது. இருந்தாலும் வைரமுத்து பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை எனவும் கூறி விட்டார்.

இவங்களும் விருதுக்கு தகுதியானவர்கள்

இவங்களும் விருதுக்கு தகுதியானவர்கள்

இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரான ரஜினிகாந்திற்கு தாதா சாகிப் பால்கே விருது கிடைத்ததற்கு ட்விட்டரில் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், இதே போல் தமிழ் சினிமாவின் மற்ற பெரும் கலைஞர்களான கமல், பாரதிராஜா, இளையராஜா ஆகியோருக்கும் தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பரபரப்பான கோலிவுட்

பரபரப்பான கோலிவுட்

இளையராஜாவையும் விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என வைரமுத்து கேட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்,

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசுக்கு கோரிக்கை

கமலஹாசன் - பாரதிராஜா - இளையராஜா
என்று
பால்கே விருதுக்குத்
தகதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்

என குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இணைந்து பணியாற்ற இருவரும் மறுத்து வரும் நிலையில், இளையராஜாவை விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என வைரமுத்து பரிந்துரை செய்துள்ளது தான் தற்போது கோலிவுட்டின் டாக்காக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X