»   »  'பிக்பாஸ் பிரபலங்கள் போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க...' - வருத்தத்தில் வையாபுரி!

'பிக்பாஸ் பிரபலங்கள் போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க...' - வருத்தத்தில் வையாபுரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வெளியே போனதும் ஒரு குடும்பமாக நாம் ஊர் சுற்றுவோம்' என கூறியவர்கள் என் போனை கூட எடுப்பது இல்லை

சென்னை : கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகிறேன் எனக் கூறியவர் வையாபுரி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரச்னையின் போதும் இவர் இப்படிக் கூறினார். ஆனால், 80 நாட்களுக்குப் பிறகுதான் அங்கிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றவர்கள் நான் போன் செய்தால் எடுப்பதே இல்லை என வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

வையாபுரி

வையாபுரி

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகிறேன் எனக் கூறியவர் வையாபுரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரச்னையின் போதும் இவர் பலமுறை இப்படிக் கூறினார். ஆனால், எவிக்ட் ஆகாமல் தொடர்ந்து பங்கேற்றார்.

மனதை மாற்றிய பிக்பாஸ்

மனதை மாற்றிய பிக்பாஸ்

கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை இருந்ததால், ஒருவேளை டைட்டிலை வென்றுவிடுவாரோ என அனைவரையும் நினைக்க வைத்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர் தன் வாழ்க்கையில் பல விஷயங்களை தற்போது உணர்ந்து கொண்டதாகப் பேசியுள்ளார்.

கலகலப்பு 2

கலகலப்பு 2

இதைத் தொடர்ந்து இவர் சுந்தர்.சி இயக்கியிருக்கும் 'கலகலப்பு 2' படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். நிறைய பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்து சினிமாவில் ஜெயிப்பார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பாக அமைந்த மேடை பிக்பாஸ்.

பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், 'கலகலப்பு 2' படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் வையாபுரி பேசும்போது பிக்பாஸ் பற்றியும் பேசியிருக்கிறார்.

போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க

போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க

"நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் "அண்ணே... நீங்க எல்லாம் அங்க போனது இல்லையா, வெளியே போனதும் ஒரு குடும்பமாக நாம் ஊர் சுற்றுவோம்" என கூறினர். ஆனால் இப்போது வரை அதை யாரும் செய்யவில்லை. நான் போனில் அழைத்தாலும் யாரும் என் காலை எடுப்பது இல்லை" என மிக வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

English summary
Many of the participants of the Biggboss show are getting good opportunities in cinema. In this scenario, Vaiyapuri spoke in a interview about biggboss. "No one can take my calls, Whenever I call biggboss friends", says vaiyapuri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil