»   »  பிக்பாஸுக்கு பிறகு வையாபுரி கமிட் ஆன பெரிய படம்!

பிக்பாஸுக்கு பிறகு வையாபுரி கமிட் ஆன பெரிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தற்போது படங்கள், விளம்பரங்கள் என பிஸியாகிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போது தேடித்தேடி வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டியால் நடிகை ஓவியாவும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

 Vaiyapuri committed in big film after Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே வீட்டை விட்டுப் போகிறேன் எனக் கூறியவர் வையாபுரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரச்னையின் போதும் இவர் பலமுறை இப்படிக் கூறினார். ஆனால், எவிக்ட் ஆகாமல் தொடர்ந்து பங்கேற்றார்.

கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை இருந்ததால், ஒருவேளை டைட்டிலை வென்றுவிடுவாரோ என அனைவரையும் நினைக்க வைத்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர் தன் வாழ்க்கையில் பல விஷயங்களை தற்போது உணர்ந்து கொண்டதாகப் பேசியுள்ளார்.

 Vaiyapuri committed in big film after Biggboss

இதைத் தொடர்ந்து இவர் சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று வையாபுரி கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் முன்பு ஓவியாவும் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Contestants participating in the Biggboss show are now busy with films and ads. Vaiyapuri was said that, he was leaving the house from the first day of the Biggboss show. Now, He play a major role in the second episode of the Sundar C's 'Kalakalappu'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil