»   »  'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த வையாபுரி!

'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' - ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த வையாபுரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 நிறைவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிதாக அறிமுகமில்லாத பலரும் செலிபிரிட்டி அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு புதிய பட வாய்ப்புகளும், விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களது செயல்களுக்கும், பேச்சுக்கும் ஏற்ப ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. ஓவியாவைக் கொண்டாடிய ரசிகர்கள் காயத்ரியை திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

வையாபுரிக்கு ஆதரவு :

வையாபுரிக்கு ஆதரவு :

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு என்டர்டெயினராக கிட்டத்தட்ட 80 நாட்கள் பங்குபெற்றுவிட்டு வெளியே வந்த வையாபுரிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுச் சூழல் நிலவியது. பிக்பாஸ் போட்டியின் முதல் நாளில் இருந்தே வெளியேறுவதாகச் சொல்லி வந்தாலும், முக்கால்வாசி நாட்களைக் கடந்தார் வையாபுரி.

அக்கவுன்ட் இல்லாத வையாபுரி :

அக்கவுன்ட் இல்லாத வையாபுரி :

முன்பே நிறைய படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் மூலம் இப்போது வெகு பிரபலமான வையாபுரி புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். வையாபுரிக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் நாட்டம் இல்லாததால் ட்விட்டரில் கணக்கு இல்லை. ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் அவர் அதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆக்டிவாக இல்லாமல் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் ட்ரெண்ட் :

பிக்பாஸ் ட்ரெண்ட் :

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் போட்டியாளர்களைப் பற்றி ட்விட்டரில் அதிகமாகப் பேசி வருகின்றனர். ஓவியா ஆர்மி அப்படித்தான் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ட்ரெண்ட் ஆனது. அதனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களான ஆர்த்தி, காயத்ரி, காஜல் ஆகியோர் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.

புதுக்கணக்கு தொடங்கிய வையாபுரி :

பிக்பாஸுக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து நடிகர் வையாபுரி இப்போது ட்விட்டரில் கணக்கு தொடங்கி இருக்கிறார். கடந்த அக்டோபர் 1-ம் தேதி ட்விட்டருக்கு வந்த இவர் தனது புகைப்படங்களைப் பதிவேற்றி இருக்கிறார். அவருக்கு தற்போது மிகக் குறைவான ஃபாலோயர்களே இருக்கிறார்கள்.

வீட்டுக்குப் போகணும் :

'தயவு செய்து யாரும் எனக்கு ஓட்டு போடாதீங்க... நான் ஊருக்குப் போகணும் என் பொண்டாட்டி பிள்ளைகள பாக்கணும்' என பிக்பாஸ் வீட்டினுள் அழுததை இப்போது பகிர்ந்திருக்கிறார் வையாபுரி.

English summary
Vaiyapuri, who told to leave from the first day in Biggboss, but he stay nearly 80 days in biggboss house. Vaiyapuri, an entertainer in biggboss house, he supported by netizens. Vaiyapuri is now starting a account on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil