»   »  அய்யோ என் பொண்டாட்டி: வையாபுரியை கதறவிட்ட பிக் பாஸ்

அய்யோ என் பொண்டாட்டி: வையாபுரியை கதறவிட்ட பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வையாபுரியின் மனைவி ஆனந்தி வந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஓவியா கிளம்பிய கையோடு பிக் பாஸ் யாவாரம் அடிவாங்கிவிட்டது.

இந்நிலையில் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் தினமும் ஒரு சாகசம் செய்ய வேண்டி உள்ளது.

வையாபுரி

வையாபுரி

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று கூறி நடிகர் வையாபுரி அவ்வப்போது அழத் துவங்கிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மனைவி

வையாபுரியின் மனைவி ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரையும் ஃப்ரீஸ் என்று சொல்லி சிலையாக இருக்க வைத்துவிட்டு ஆனந்தியை வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார் பிக் பாஸ்.

பொண்டாட்டி

பொண்டாட்டி

ஆனந்தி வந்து வையாபுரியை பார்த்ததும் வையா, வையா என்று அழைக்க அவரோ சின்சியர் சிகாமணியாக ஃப்ரீஸ் பொசிஷனில் நிற்கிறார். ஆனந்தியை பிக் பாஸ் கிளம்பச் சொன்னதும் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்கிறார் வையாபுரி.

டாஸ்க்

பிக் பாஸ் என்னைக்கி ப்ரொமோ வீடியோவில் உண்மையை சொல்லியிருக்கிறார். உங்க அதிரடி எங்களுக்கு சர்பிரைஸாவே இல்ல பிக் பாஸ். கொஞ்சம் மாத்தி யோசிச்சிட்டு வாங்க என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அழுகை

சும்மாவே அழும் மனுஷன் கண்ணில் அவர் பொண்டாட்டியை வேறு காண்பித்துவிட்டார்களா. இனி இரண்டு நாட்களுக்கு ஒரே அழுகையாகத் தான் இருக்கும்.

English summary
Actor Vaiyapuri's wife Anandhi has visited him in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil